ஷாருக்கானுக்கு சிவசேனா ஆதரவு!

Bookmark and Share

ஷாருக்கானுக்கு சிவசேனா ஆதரவு!

இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக கூறப்படுவதற்கு பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் ஆதரவு தெரிவித்தார். சகிப்புத்தன்மையை வலியுறுத்தி தேவைப்பட்டால் பத்மஸ்ரீ விருதை மத்திய அரசிடம் திருப்பிக் கொடுப்பேன் என்றும் ஷாருக்கான் கூறினார்.

இதற்கிடையே பா.ஜ.க. எம்.பி. யோகி ஆதித்யா நாத் என்பவரும் ஷாருக்கானுக்கு எதிரான பரபரப்பு கருத்துக்களை வெளியிட்டார். அவர் கூறுகையில், ‘‘ஷாருக்கான் நடிக்கும் படங்களை இந்துக்கள் பார்க்காவிட்டால் அவரும் சாதாரண முஸ்லிம் போல தெருவில் அலைய வேண்டியதுதான்’’என்றார்.

ஷாருக்கானுக்கு பா.ஜ.க., விசுவ இந்து பரிஷத் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மராட்டியத்தில் சிவசேனா கட்சி ஷாருக்கானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ரவுத் கூறியது “ இந்தியா சகிப்புத்தன்மை மிகுந்த நாடு. முஸ்லிம்களும் சகிப்புத்தன்மையுடன் உள்ளனர். ஷாருக்கானை முஸ்லிம் என்ற காரணத்துக்காக விமர்சிப்பதும், எதிர்ப்பதும் சரியான நடைமுறை அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

பாராளுமன்ற காங்கிரஸ் துணைத்தலைவர் மல்லிகார்ஜுனா கூறுகையில், சகிப்புத்தன்மை குறைவை சுட்டிக் காட்டுபவர்களுக்கு எதிராக வெளியிடப்படும் அறிக்கைகளை பிரதமர் கண்டும் காணாமல் மவுனமாக உள்ளார். மாறாக அவர் அந்த அறிக்கைகளை தூண்டி விடுகிறார்.

பிரதமர் மோடியிடம் சகிப்புத்தன்மை என்பதே இல்லை. அவர் மந்திரிகள், எம்.பி.க்களிடமும் சகிப்பு தன்மை இல்லை என்றார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கூறுகையில், ‘‘பா.ஜ.க. எம்.பி கைலாஷ் விஜயவர்கியா நடிகர் ஷாருக்கான் பற்றி மிகவும் மோசமாக விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஷாருக்கானிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

 


Post your comment





Related News
ஷாருக்கானை ரீப்ளேஸ் செய்வாரா அஜித்?
28 வருடம் கழித்து டிகிரி பட்டம் வாங்கிய ஷாருக்கான்!
ஜெர்மனியில் வெளியாகும் ஷாருக்கானின் தில்வாலே!
பாலிவுட்டை ஆச்சரியத்தில் உறையவைத்த ஷாருக்-கஜோல் ’தில்வாலே’ பாடல் வீடியோ!
ஷாருக்கானுக்கு ஆதரவளித்த ஹேமமாலினி
அதிருப்தியில் ஷாரூக் கான்
என்ஜினியராக விரும்பிய தனது ஏக்கத்தை சுந்தர் பிச்சையிடம் பகிர்ந்து கொண்ட ஷாருக் கான்
ஷாரூக் கானிற்காக ஒதுங்கிய பாஹி
ஷாரூக்குடன் மோத விரும்பாத ப்ரியங்கா சோப்ரா!
புது லுக்கை வெளியிட்ட ஷாரூக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions