ஷாரூக்கான் அழைப்பை எதிர்பார்க்கும் கிங்காங்!

Bookmark and Share

ஷாரூக்கான் அழைப்பை எதிர்பார்க்கும் கிங்காங்!

ஷாரூக்கான்-தீபிகா படுகோனே இணைந்து நடித்த படம் சென்னை எக்ஸ்பிரஸ். இந்த படத்தில் சத்யராஜ், மனோரமா, கிங்காங் உள்பட சில தமிழ் நடிகர் நடிகைகளும் நடித்திருந்தனர்.

இதில் கிங்காங் நடித்தது சிறிய வேடம் என்றபோதும், ஷாரூக்கானுடனான காம்பினேசன் காட்சிகளில் தோன்றி நடித்தார். அதோடு, அந்த படத்தின் ப்ரமோஷன் மும்பையில் நடைபெற்றபோது தமிழ் நடிகர்கள் அனைவரும் அதில் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில், இப்போது சென்னை எக்ஸ்பிரஸ் டீம் மீண்டும் இணைந்து இன்னொரு புதிய படத்தை தொடங்கியிருக்கிறார்களாம். இன்னும் டைட்டில் வைக்காத அந்த படத்தில் நடிக்க சென்னை எக்ஸ்பிரஸில் நடித்த கோலிவுட் கலைஞர்கள் யாரையும் அழைக்கவில்லையாம்.

இருப்பினும், அப்படத்தில் நடித்தபோது என்னிடம் ரொம்ப அன்பாக பேசினார் ஷாரூக்கான். அதோடு, பியூச்சரில் நாம் தொடர்ந்து நடிப்போம் என்றெல்லாம் சொன்னார். அதனால், புதிய படத்தில் நடிப்பதற்கு அழைப்பு வருவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார் கிங்காங்.


Post your comment





Related News
ஷாருக்கானை ரீப்ளேஸ் செய்வாரா அஜித்?
28 வருடம் கழித்து டிகிரி பட்டம் வாங்கிய ஷாருக்கான்!
ஜெர்மனியில் வெளியாகும் ஷாருக்கானின் தில்வாலே!
பாலிவுட்டை ஆச்சரியத்தில் உறையவைத்த ஷாருக்-கஜோல் ’தில்வாலே’ பாடல் வீடியோ!
ஷாருக்கானுக்கு ஆதரவளித்த ஹேமமாலினி
ஷாருக்கானுக்கு சிவசேனா ஆதரவு!
அதிருப்தியில் ஷாரூக் கான்
என்ஜினியராக விரும்பிய தனது ஏக்கத்தை சுந்தர் பிச்சையிடம் பகிர்ந்து கொண்ட ஷாருக் கான்
ஷாரூக் கானிற்காக ஒதுங்கிய பாஹி
ஷாரூக்குடன் மோத விரும்பாத ப்ரியங்கா சோப்ரா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions