பாலிவுட்டை ஆச்சரியத்தில் உறையவைத்த ஷாருக்-கஜோல் ’தில்வாலே’ பாடல் வீடியோ!

Bookmark and Share

பாலிவுட்டை ஆச்சரியத்தில் உறையவைத்த ஷாருக்-கஜோல் ’தில்வாலே’ பாடல் வீடியோ!

ஷாருக்கான், கஜோல் நடிப்பில் உருவான தில்வாலே படத்தின் ’ரங் தே து மொஹி கேறுவா’ பாடல் நேற்று இரவு வெளியாகி 12 மணி நேரத்திற்குள் 6 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஐந்துவருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சேர்ந்துள்ள ஷாருக், கஜோல் ஜோடி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

கடைசியாக  ’மை நேம் இஸ் கான்’ படத்தில் 2010 தில் இருவரும் இணைந்து நடித்தனர். அதன் பிறகு தற்போது வெளியாகி உள்ள இப்பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

எ காலி காலி காகென், ஜாத்தி ஹூன் மெயின் , தூஜே தேக்ஹா தொ எ ஜானா சனம், சூரஜ் ஹுவா மத்தம் போன்ற பாடல்களைப் போலவே இப்பாடலிலும் இருவரது கெமிஸ்ட்ரி மிகப் பெரிய பலம்.

50 வயதிலும் இத்தனை இளமையாகத் தெரியும் ஷாருக், செக்ஸி கஜோல், பிரித்தம் இன் இசை, பாராஹ் கானின் கோரியோக்ராபி, அர்ஜித் சிங் இன் ரொமாண்டிக் குரல் ஆகிய அத்தனையும் இணைந்து பாடலை திரும்பத் திரும்பக் கேட்க வைக்கின்றன.

ஐஸ்லாந்தின் அழகினை தனது கேமரா மூலம்  அப்படியே தந்துள்ளார் ஒளிபதிவாளர் டுட்லே, பாடலின் ஒவ்வொரு காட்சியுலும் ஐஸ்லாந்தின் அழகு சொட்டுகிறது. கண்களை இமைக்கக் கூட இடம் விடவில்லை இயக்குநர் ரோஹித் ஷெட்டி. 

இவருடத்தின் சிறந்த காதல் பாடல்கள் வரிசையில் இப்பாடல் நிச்சயம் முதல் இடத்தை பிடிக்கும் என ரசிகர்கள் தங்களது கருத்துகளை ட்விட்டர், முகநூல் மூலம் ட்ரெண்டாக்கி வருகின்றன. ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திருக்கும் இப்படம் டிசம்பர் 18ல் வெளிவர இருக்கிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions