பெங்களூர் டேஸ் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஷர்வானந்த்?

Bookmark and Share

பெங்களூர் டேஸ் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஷர்வானந்த்?

மலையாளத்தில் சென்ற வருடம் வெளியான பெங்களூர் டேஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து அந்த படத்தை தமிழ், தெலுங்கு என மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய போட்டாபோட்டி நடந்துவருகிறது.

தற்போது தமிழில் இந்த படத்தை பற்றி எந்த செய்தியும் வெளிவராத நிலையில் தெலுங்கில் பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்தாக வேண்டுமென்று அப்படத்திற்கான நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் வேலையை செய்து வருகிறார்கள்.

ஏற்கனவே நாம் கூறியதுபோல் பெங்களூர் டேஸ் படத்தின் ரீமேக்கிலிருந்து சித்தார்த் மற்றும் சமந்தா விலகிவிட்டனர், இதனிடையே நடிகர் ஷர்வானந்திற்கு பெங்களூர் டேஸ் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்திருக்கிறதாம்.

இதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் எதுவும் நிரந்தரமில்லை என்று எண்ணிக் கொள்வாமாக. பிவிபி சினிமாஸ் நிறுவனம் பெங்களூர் டேஸ் படத்தின் தெலுங்கு ரீமேக்கை தயாரிக்கிறது, பொம்மரிலு படத்தை இயக்கிய இயக்குனர் பாஸ்கர் தான்  இப்படத்தை இயக்கப்போகிறார் . 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions