விரைவில் தொடங்குகிறது ஷர்வானந்தின் அடுத்த படம்

Bookmark and Share

விரைவில் தொடங்குகிறது ஷர்வானந்தின் அடுத்த படம்

டோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் ஹிரோவான ஷர்வானந்தின் அடுத்த படத்தின் தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளது, வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ் படத்தை இயக்கிய மெர்லபகா காந்தி தான் ஷர்வானந்தின் அடுத்த படத்தை இயக்கப்போகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு நாயகியை தேர்வு செய்யும் வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. வெற்றிப் படங்களை தயாரித்து வரும் உப்பளபட்டி பிரமோத் மற்றும் வம்சி கிருஷ்ணா இப்படத்தை தயாரிக்கப்போகிறார்கள்.

அடுத்தடுத்து இரண்டு ஹிட்டுகளை கொடுத்துள்ள ஷர்வானந்த் தற்போது இயக்குநர் சேரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஏமிட்டோ ஈ மாயா” என்ற படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். விரைவில் இயக்குநர் காந்தியுடனான அடுத்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions