படவாய்ப்புகளை வரவேற்கும் செம்மீன் ஷீலா!

Bookmark and Share

படவாய்ப்புகளை வரவேற்கும் செம்மீன் ஷீலா!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகை ஷீலா. மலையாளத்தில் இவர் நடித்த செம்மீன் என்ற படம் தமிழிலும் சக்கைப்போடு போட்டது. அதிலிருந்து செம்மீன் ஷீலா என்றே இவர் அழைக்கப்பட்டு வருகிறார். தற்போது 70 வயதாகும் இவர் அவ்வப்போது தமிழ், மலையாளத்தில் சில படங்களில் நடித்து வருகிறார்.

அந்தவகையில், தமிழில் ரஜினி நடித்த சந்திரமுகி படத்தில் நடித்தவர் 6 வருடங்கள் கழித்து தனுஷின் சீடன் படத்தில் நடித்தவர், தற்போது பாலக்காட்டு மாதவன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

முந்தைய படங்களை விட பாலக்காட்டு மாதவன் படத்தில் ஷீலாவுக்கு அழுத்தமான கதாபாத்திரம் என்பதால் மீண்டும் அவரது நடிப்பு பேசப்பட்டு வருகிறது. மேலும், மலையாள சினிமாவில் இவருக்கு இப்போது சேலஞ்சிங்கான வேடம் கொடுக்கிறார்களாம்.

மேலும், எனக்கு நடிப்பின் மீது எப்போதுமே ஆர்வம் குறையாது. அதனால் தொடர்ந்து அம்மா, பாட்டி என தனது வயதுக்கேற்ற கேரக்டர்களில் நடிக்க ஆசைப்படுவதாக சொல்லும் ஷீலா, நடிப்பைப்பொறுத்தவரை எந்தமாதிரியான வேடம் என்றாலும் அதற்கேற்ப என்னால் முழுமையாக நடிக்க முடியும். அதனால் தொடர்ந்து படவாய்ப்புகளை வரவேற்கிறேன் என்கிறார் ஷீலா.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions