ஷெரீனை வட்டம் போடும் காமெடியன்கள்!

Bookmark and Share

ஷெரீனை வட்டம் போடும் காமெடியன்கள்!

துள்ளுவதோ இளமை படத்தில் துள்ளலான இளமையை வெளிப்படுத்தி நடித்தவர் ஷெரீன். முதல் படத்திலேயே கிளுகிளுப்பான காட்சியிலும் நடித்ததால் இளவட்டங்களை கொள்ளை கொண்டார் ஷெரீன். அதையடுத்து, விசில், ஸ்டூடன்ட் நம்பர் ஒன் என சில படங்களில் நடித்து வந்தவர் பூவா தலையா படத்துக்குப்பிறகு காணாமல் போய்விட்டார்.

இந்த நிலையில், தற்போது செகண்ட் ரவுண்டாக நண்பேன்டா படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்து என்ட்ரி கொடுத்திருக்கிறார் ஷெரீன். இதன்பிறகு திகில் என்ற படத்தை கைவசம் வைத்திருக்கும், அவர் அடுத்தபடியாக கதாநாயகி வாய்ப்பு கிடைக்குமா? என்றும் சிலருக்கு தூது அனுப்பிக்கொண்டிருக்கிறார்.

ஆனால், சந்தானத்துடன் ஷெரீன் நடித்து விட்டதால், அடுத்து அவருக்கு காமெடியன்களுடன் ஜோடி சேரும் வாய்ப்புகளே கிடைக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. காரணம், தற்போதைய எந்த காமெடியனுககும் சரியான ஜோடி நடிகைகளே இல்லாத நிலை இருப்பதால், ஷெரீனை அந்த காலி இடத்தை நிரப்ப வைக்கலாம் என்று தற்போதைய காமெடியன்களான சூரி, கருணாகரன்  உள்ளிட்டோர் தங்களுக்கு ஜோடியாக அவரை நடிக்க வைக்க முயற்சித்து வருகின்றனர்.

இப்படி காமெடியன்கள் தன்னுடன் நடிக்க வட்டம் போடும் விவகாரம் ஷெரீனின் காதுக்கு சென்றதை அடுத்து அவர் பெரிதாக ஒன்றும் பீல் பண்ணவில்லையாம். மாறாக, நான் எதிர்பார்க்கும் ஹீரோக்களின் படங்கள் ஒருவேளை கிடைக்காதபட்சத்தில் காமெடி ரவுண்டுக்கு என்னை தயார்படுத்திக்கொள்ளவும் தயங்க மாட்டேன் என்று தனது சகாக்களிடம் கூறி வருகிறாராம் ஷெரீன்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions