மூடுஅவுட்டில் ஷெரீன்!

Bookmark and Share

மூடுஅவுட்டில் ஷெரீன்!

துள்ளுவதோ இளமை ஷெரீனை அத்தனை எளிதில் மறந்து விட முடியாது. முதல் படத்திலேயே தனுசுடன் நெருக்கமாக நடித்து சர்ச்சையை ஏற்படுத்தியவர். அதையடுத்து, ஜெயா, ஸ்டூடன்ட் நம்பர்-1, கோவில்பட்டி வீர லட்சுமி ஆகிய படங்களில் நடித்த ஷெரீனுக்கு பின்னர் சரியான படங்கள் அமையவில்லை.

அதனால் கன்னடம், மலையாளம் என்று நடித்து வந்தவர், ஒருகட்டத்தில் நான் டைரக்சன் பண்ணப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டு வெளிநாடு சென்று படித்து விட்டு மீண்டும் சினிமா உலகத்திற்குள் வந்தார்.

ஆனால், அவரை நம்பி சான்ஸ் கொடுக்க டைரக்டர்கள் மட்டுமின்றி, அவரது நெருக்கமான ஹீரோக்களும் அவர் இயக்கத்தில் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் டைரக்ஷன் செய்யும் முயற்சியை ஓரங்கட்டி விட்டு மீண்டும் நடிக்கத் தொடங்கிய ஷெரீன், தற்போது நண்பேன்டா, திகில் படங்களில் நடிக்கிறார்.

இதில் திகில் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருப்பவர், நண்பேன்டா படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் ஷெரீனுக்கும் கதையில் பங்கு உள்ளது என்று சொல்லியவர்கள் இப்போது அவரை வெறும் காமெடி பீசாக்கி விட்டார்களாம்.

அதைக்கேள்விப்பட்டு இப்போது குண்டு ஆர்த்தி நடிக்க வேண்டிய காமெடி கேரக்டர்களில் நடிக்க ஷெரீனை தொடர்பு கொள்கிறார்களாம். அதனால் விட்ட மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என்று சந்தானத்துடன் நடித்து இப்போது கொஞ்சம்நஞ்சம் இருந்த மார்க்கெட்டையும் காலி பண்ணி விட்டேனே என்று மூடுஅவுட்டில் இருக்கிறார் ஷெரீன்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions