தமிழ் நடிகை மர்ம மரணம்: கொலை செய்யப்பட்டாரா? போலீஸ் விசாரணை

Bookmark and Share

தமிழ் நடிகை மர்ம மரணம்: கொலை செய்யப்பட்டாரா? போலீஸ் விசாரணை

சிறகு என்ற தமிழ் படத்தில் நடித்த மலையாள நடிகை ஷில்பா. சில மலையாளப் படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். அவரும் புகைப்பட கலைஞர் விஜின் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

ஷில்பா திருவனந்தபுரம் அருகில் உள்ள சொந்த ஊரான வெள்ளநாட்டில் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஷில்பா சொந்த ஊரில் உள்ள ஆற்றில் பிணமாக மிதந்துள்ளார். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். ஷில்பாவுக்கும், காதலன் விஜினுக்கும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது. கடந்த 18ந் தேதி ஷில்பா, விஜின் மற்றும் இன்னொரு பெண்ணுடன் வெளியில் சென்றுள்ளார். மூவரும் தனியாக சந்தித்து பேசி உள்ளனர்.

அப்போது அவர்ளிடையே மோதல் வெடித்துள்ளது. ஷில்பாவை விஜின் அடித்துள்ளார். இதனை ஷில்பா தனது தோழியிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகுதான் ஷில்பா ஆற்றில் பிணமாக மிதந்துள்ளார்.

அவர் காதலனுடன் கோபித்துக் கொண்டு தற்கோலை செய்து கொண்டாரா? அல்லது அவர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக ஷில்பாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

 


Post your comment





Related News
மாலத்தீவு கடற்கரையில் உல்லாசம், நடிகையின் புகைப்படத்தால் கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
ஆடையில்லாமல் சூப்பராக யோகா செய்வேன் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.!
என்னது இது சேலையா? இஞ்சி இடுப்பழகியை கலாய்க்கும் நெட்டிசன்கள் - போட்டோ உள்ளே.!
தொழிலதிபரிடம் 100 கோடி நஷ்டஈடு கேட்ட பாலிவுட் நடிகை
மோசடி புகார்: ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு
விஜய் சேதுபதி பட டீசரை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் நடிகை
முகத்தை மூடுவதை முதலில் நிறுத்துங்கள்! நடிகை ஷில்பா ஷெட்டி ஆவேசம்
இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் தந்தை மரணம்
நடிகை ஷில்பா ஷெட்டியின் பெற்றோரிடம் ரூ. 2 கோடி மோசடி செய்தவர் கைது
பண மோசடி விவகாரம்: நடிகை ஷில்பா ஷெட்டி மீது கொல்கத்தா போலீசார் வழக்கு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions