25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிவா

Bookmark and Share

25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிவா

கடந்த 1989ஆம் ஆண்டு வெளிவந்த மெகா ஹிட் படமான சிவாவை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. பிரபல இயக்குனரான ராம் கோபால் வர்மாவும், பிரபல நடிகர் அக்கினேனி நாகர்ஜுனும் இணைந்து ஒரு மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தனர்.

இந்த படத்தின் மற்றொரு சிறப்பு நாகர்ஜுனுக்கு ஜோடியாக பிரபல நடிகை அமலா நடித்து உள்ளார். இந்த படம் வெளிவந்து 25 ஆண்டுகள் ஆகின்றன. அதனால் இதனை ஒரு மிக பெரிய அளவில் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, அந்த படத்தை டிஜிட்டல் முறையில் மாற்றி மீண்டும் ரிலீஸ் செய்ய உள்ளனர். இந்த புதிய டிஜிட்டல் வடிவத்திற்கு 20 டிரைலர்களும் ரெடி ஆகி வருகின்றது.

இந்த படத்தின் வெளியீடு சம்பந்தமாக இயக்குனர் ராம் கோபால் வர்மாவும், பிரபல நடிகர் நாகர்ஜுனும் இணைந்து ஒரு பிரஸ் மீட்டுக்கு விரைவில் அழைப்பு விடுக்க இருக்கிறார்கள்.

அனைத்து ஏற்பாடுகளையும் அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் நிறுவனம் பெரிய அளவில் செய்து வருகின்றது. அந்த படத்தில் கல்லூரியில் அரசியல் கலந்தால் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனை இயக்குனர் ராம் கோபால் வர்மா அழகாக சொல்லி இருப்பார். புதிய சிவா வரும் மே 15ம் திரைக்கு வருகின்றான். 

 


Post your comment





Related News
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
தமிழ்படம் 2 வெளியாவதில் சிக்கல்- எதனால் தெரியுமா
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
தனுஷின் விஐபி-யில் நடந்த மோசடி, சும்மா விடுவாரா தனுஷ்
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
தமிழ்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்! புதிய பெயர் இதோ..
அடப்பாவிங்களா பிக்பாஸையும் விட்டு வைக்கவில்லையா! தமிழ்படத்தின் அடுத்த அலப்பறை
இதயங்களை கொள்ளை கொள்ளும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாழ்த்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions