Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/tamilin/public_html/tamil/cms/db.php on line 5
‘தல 57’ சிவாவின் இன்னொரு அற்புதம் – புகழும் பிரபல நடிகை! - Shivaajithakshara - அஜித் – சிவா  | Tamilstar.com |

‘தல 57’ சிவாவின் இன்னொரு அற்புதம் – புகழும் பிரபல நடிகை!

Bookmark and Share

‘தல 57’ சிவாவின் இன்னொரு அற்புதம் – புகழும் பிரபல நடிகை!

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார். இதுவரை ‘தல 57’ படத்தின் 60% காட்சிகள் படமாகியுள்ளது.

இதன் மூன்றாம் மற்றும் இறுதிகட்ட படப்பிடிப்பு அண்மையில் பல்கேரியாவில் தொடங்கியுள்ளது. மொத்தம் 55 நாட்கள் இதன் படப்பிடிப்பு அங்கு தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. இப்படத்தின் இரண்டாவது நாயகியான அக்ஷரா ஹாசன் இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக அண்மையில் பல்கேரியா சென்றுள்ளார்.

மொத்தம் 30 நாட்கள் அவர் அங்கே தங்கியிருந்து இதில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இப்படம் குறித்து அண்மையில் டிவிட்டரில் கருத்து தெரிவித்த அவர், சிவா இன்னொரு அற்புதமான படத்தை இயக்கி வருவதாக கூறியுள்ளார். மேலும் அஜித்துடன் நடிப்பது என் அதிர்ஷ்டம். அவர் மிகச்சிறந்த நடிகர் மற்றும் மனிதர் என்றும் அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions