பிளாக்கில் விற்கப்பட்ட சிவராஜ் குடும்ப கல்யாண அழைப்பிதழ்

Bookmark and Share

பிளாக்கில் விற்கப்பட்ட சிவராஜ் குடும்ப கல்யாண அழைப்பிதழ்

கன்னடத் திரையுலகின் முக்கிய குடும்பமான மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் நடிகர் சிவராஜ்குமாரின் மகள் நிருபமாவின் திருமணம் நேற்று பெங்களூரு பேலஸ் மைதானத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

அந்தத் திருமணத்திற்கான அழைப்பிதழைப் பெறுவதற்காக சிவராஜ்குமாரின் ரசிகர்கள் தீவிர ஆர்வம் காட்டினர். அதை அறிந்த பிளாக் மார்க்கெட்டினர், ஒரிஜனல் அழைப்பிதழ் போலவே போலியான அழைப்பிதழ்களை அச்சிட்டு 10000 ரூபாய் முதல் 20000 ரூபாய் வரை விற்றனர்.

அதைப் பற்றிக் கேள்விப்பட்ட சிவராஜ்குமார் குடும்பத்தினர் திருமண அரங்கில் பலத்த பாதுகாப்பைப் போட்டுள்ளனர். எண்ணற்ற காவல் துறையினருடன், தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தினரும் நேற்றைய திருமணத்தில் பாதுகாப்பைக் கவனித்துள்ளனர். 

நேற்று காலை பெங்களூரு நகரமே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறியிருக்கிறது. தனது மகள் திருமணத்திற்காக சிவராஜ் குமார் சென்னை, ஹைதராபாத், மும்பை என பல நகரங்களுக்கும் சென்று அந்தந்த திரையுலகினரை தனியாக அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டவர்களுக்கு நேரடியாக வந்து அழைப்பிதழை அளித்தார். கன்னடத் திரையுலகினர் பலரும் நேற்றைய திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

தனது ரசிகர்கள் தன் குடும்பத்து திருமண விழாவைக் காண்பதற்காக இணையதளம் மூலம் திருமணத்தையும், வரவேற்பு நிகழ்ச்சியையும் ஒளிபரப்பவும் சிவராஜ்குமார் ஏற்பாடு செய்திருந்தார். நேற்று மாலையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி பெரும் கூட்டத்தால் திக்குமுக்காடிப் போனதாகத் தெரிவிக்கிறார்கள். 


Post your comment





Related News
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
'அண்ணனுக்கு ஜே ' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நாகினி சீரியல் கவர்ச்சி நடிகை!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
தமிழ்படம் 2 வெளியாவதில் சிக்கல்- எதனால் தெரியுமா
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
தனுஷின் விஐபி-யில் நடந்த மோசடி, சும்மா விடுவாரா தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions