சிவாஜி மணிமண்டபம் கட்டக்கோரி ரசிகர்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு

Bookmark and Share

சிவாஜி மணிமண்டபம் கட்டக்கோரி ரசிகர்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு

நடிகர் திலகம் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக தமிழக அரசு சென்னை அடையாறு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் 62 செண்ட் நிலம் ஒதுக்கியது. நடிகர் சங்கம், மணி மண்டபத்தை கட்டும் என்று அப்போது அறிவிக்கப்பட்டது.

அரசு இடம் ஒதுக்கி 13 ஆண்டுகள் ஆகியும் இதுவரை நடிகர் சங்கம் சிவாஜி மணிமண்டபம் கட்டுவதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதானல் இடத்தை திரும்ப எடுத்துக் கொள்ளலாமா என்று அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சிவாஜிக்கு மணிமண்டம் நடிகர் சங்கம் கட்டும் என்பதில் நம்பிக்கை இல்லை. அரசே கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி சிவாஜி ரசிகர்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். மதுரையில் நேற்று கூடிய சிவாஜி சமூக நலப்பேரவை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் கே.சந்திரசேகரன் கூறியதாவது: கர்நாடகத்தில் நடிகர் ராஜ்குமார் மறைந்த ஒரு ஆண்டுக்குள் அந்த மாநில அரசு மணிமண்டபம் கட்டியது. விஷ்ணுவர்த்தனுக்கு மணி மண்டபம் கட்ட ரூ.10 கோடி கொடுத்தது.

இங்கு நடிகர் திலகம் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட அரசு 65 செண்ட் இடம் கொடுத்தது. அதன் மதிப்பு இன்று பலகோடி. மணி மண்டபத்துக்கு அப்போதைய நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் பூஜை போட்டார்.

ஆனால் இன்று வரை பொதுப்பணித்துறையிடமிருந்து அந்த இடத்தைக்கூட நடிகர் சங்கம் முறைப்படி பெறவில்லை. சிவாஜிக்கு நடிகர் சங்கம் மணிமண்படம் கட்டும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.

எனவே கர்நாடக அரசைப்போன்று தமிழக அரசே கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற ஜூலை 21ந் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு மாநிலம் தழுவிய அளவில் உண்ணாவிரம் இருக்க முடிவு செய்திருக்கிறோம். இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சிவாஜி ரசிகர்கள் கலந்து கொள்வார்கள். என்றார்.


Post your comment

Related News
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
தனுஷின் விஐபி-யில் நடந்த மோசடி, சும்மா விடுவாரா தனுஷ்
எத்தனை அரசு வந்தாலும் சிவாஜியை மதித்துதான் ஆகவேண்டும்: கமல்ஹாசன் பேச்சு
சிவாஜி பட தலைப்பை கைப்பற்றிய விஷால்?
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 15 ஆம் ஆண்டு நினைவுநாள் - செந்தமிழன் சீமான் புகழ்வணக்கம்
வீரசிவாஜி டீசரை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்!
வீரசிவாஜி படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு!
சிவாஜி சிலையை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!
மன்னவன் சென்றானடி! - இன்று சிவாஜி கணேசன் நினைவு தினம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions