மன்னவன் சென்றானடி! - இன்று சிவாஜி கணேசன் நினைவு தினம்

Bookmark and Share

மன்னவன் சென்றானடி! - இன்று சிவாஜி கணேசன் நினைவு தினம்

காலத்தாலும் எண்ண ஓட்டத்தாலும் உலகமெல்லாம் இருக்கும் தமிழர் நெஞ்சங்களில் நீக்கமற்ற நிறைந்து இருப்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பராசக்தி திரைப்படத்தில் சக்சஸ் என்ற முதல் வசனத்தைப் பேசி நடிப்பில் பிரபலமானார். சிவாஜி கண்ட இந்து ராஜியம் என்ற நாடகத்தில் நடித்ததைக் கண்டு இவருக்கு சிவாஜி என்ற பட்டத்தை பெரியார் கொடுத்தார்.

காதல், வீரம், சோகம் என்ற அனைத்து கதாபாத்திரத்திலும் தனது முத்திரையை பதித்தவர். நடிப்பில் இவரை மிஞ்சியவரை காண்பது அரிது என்று நேருவால் பாராட்டப் பெற்றவர்.

நடிகர் திலகம், நவரசத் திலகம், சிம்மக்குரல் கணேசன், கலைகுரிசல் கணேசன், பத்மஸ்ரீ கணேசன் என சிவாஜி கணேசனை அழைப்பதில் பெருமைப்படுகிறேன் என தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியால் புகழாரம் சூட்டப்பெற்றவர்.

பராசக்தி முதல் பூப்பறிக்க வருகிறோம் என 288 படங்கள் வரை நடித்துள்ளார். இதில் 100 க்கும் மேற்பட்டவை வெள்ளி விழா படங்கள். நடிக்கும் போது அந்த படத்தின் கதாபாத்திரமாகவே மாறிவிடுவது இவரது சிறப்பு.

1959 ல் வெளிவந்த வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற திரைப்படத்தை இதற்கு உதாரணமாக சொல்லலாம். 200 நாட்களுக்கு மேல் இப்படம் ஓடியதால், 1962 ல் உலகத் திரைப்பட விழாவிற்கு எகிப்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட முதல் தமிழ் படம் என்ற சிறப்பு பெற்றது.

காமராஜரின் விசுவாசியாக இருந்ததால் காங்கிரசின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டார். 1967 ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. தோல்வியை கண்டு துவண்டு விடாமல் காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்வு ஊட்டியவர் சிவாஜி கணேசன்.

தமிழக ஜனதா தள தலைவராகவும் சிவாஜி கணேசன் இருந்தார். எல்லோரிடமும் அன்பாகவும், நகைச்சுவையாகவும் பேசக்கூடியவர். நவரச திலகமாக ஒன்பது வேடங்களில் நடித்த நவராத்திரி, அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் பாசமலர், செக்கிழுத்த செம்மலாக நடித்த கப்பலோட்டிய தமிழன், புரட்சி வீரனாக நடித்த சிவந்தமண் போன்ற எண்ணற்ற படங்கள் சிவாஜி கணேசனின் பெருமையை எடுத்துக் கூறும். காலத்தால் மறக்க முடியாத அந்த மாபெரும் நடிகர் மண்ணை விட்டுமறைந்தாலும், மக்கள் மனதில் என்றும் நீங்காத இடம்பெற்றிருப்பார். 


Post your comment

Related News
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக இத்தனை துன்பங்களுக்கு இடையே அஜித் வந்துள்ளாரா? பிரம்மிக்க வைத்த தல
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
தனுஷின் விஐபி-யில் நடந்த மோசடி, சும்மா விடுவாரா தனுஷ்
நடிகர் திலகம் சிவாஜியை பெருமையடைய செய்த அறிவிப்பு- மகிழ்ச்சியில் திரையுலகம்
பிரபல நடிகரின் வீட்டில் விஜய்62 ஷூட்டிங்
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions