சந்தன வீரப்பனின் கதையில் ராஜ்குமார் மகன்

Bookmark and Share

சந்தன வீரப்பனின்  கதையில் ராஜ்குமார் மகன்

சந்தன கடத்தல் வீரப்பனின் கதையை அடிப்படையாக வைத்து எத்தனையோ படங்களை எடுத்துவிட்டனர். கடைசியாக வனயுத்தம் என்ற படத்தை எடுத்தனர். அதை வெளிவரவிடாமல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தீவிரமாக மெனக்கெட்டார்.

ஆனாலும் அப்படம் வெளியானது. இந்நிலையில், சந்தனக் கடத்தல் வீரப்பன் என்கவுன்டரில் கொல்லப்பட்டது தொடர்பான ஒரு படத்தை இயக்கவுள்ளார் சர்ச்சை இயக்குநர்  ராம்கோபால்வர்மா.

உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து பல  படங்களை எடுத்துள்ள, ராம்கோபால்வர்மா வீரப்பன் கதையை படம் எடுக்கப்போவதாக நீண்ட காலமாகவே கூறி வந்தார்.

தற்போது டேக் ஆப் ஆகிவிட்டது படம். வீரப்பன் பாத்திரத்தில் நடிக்கும் நடிகருக்கான தேர்வு நடைபெற்றுவருகிறது. வீரப்பனை சுட்டுகொன்ற போலீஸ்காரராக நடிக்கிறார் கன்னட நடிகர் சிவராஜ்குமார்.

வீரப்பனை கொன்ற போலீஸ்காரரை பற்றியும் இப்படத்தில் விரிவாக சித்தரிக்க உள்ளாராம் ராம்கோபால் வர்மா!  வீரப்பனை பற்றிய இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க சிவராஜ் குமாரை ராம்கோபால் வர்மா தேர்வு செய்ய முக்கியமான காரணம் இருக்கிறது.

வீரப்பன் உயிரோடிருந்தபோது, சிவராஜ்குமாரின் தந்தையும், நடிகருமான ராஜ்குமாரைகடத்திச் சென்று பல நாட்கள் காட்டுக்குள் வைத்திருந்தார்  வீரப்பன்.  இந்த சம்பவம் ராஜ்குமார் குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதனால்தான் இப்படத்தில் வீரப்பனை கொல்லும் போலீஸ் அதிகாரி வேடத்திற்கு சிவராஜ்குமார் ரொம்பவும் பொருந்துவார் என்று அவரை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம் ராம்கோபால் வர்மா!  

இப்போது இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் பிசியாக இயங்கி வரும் ராம்கோபால் வர்மா, விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பை துவக்கவுள்ளாரம்.  இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் உருவாக இருக்கிறதாம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions