நெடுஞ்சாலை ஷிவதா எதிர்பார்க்கும் ஜீரோ!

Bookmark and Share

நெடுஞ்சாலை ஷிவதா எதிர்பார்க்கும் ஜீரோ!

ஆரி நாயகனாக நடித்த படம் நெடுஞ்சாலை. கிருஷ்ணா இயக்கிய இந்த படத்தில் ஷிவதா நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் வெற்றி பெற்றதோடு, ஷிவதாவின் நடிப்பும் அந்த சமயத்தில் பெரிதாக பேசப்பட்டது.

ஆனபோதும், பெரிய ஹீரோக்களின் படங்கள் அவருக்கு கமிட்டாகவில்லை. அதனால் அடுத்தபடியாக ஜீரோ என்ற படத்தில் அஸ்வின் என்ற ஹீரோவுடன் தான் கமிட்டானார்.

முந்தைய படத்தில் ஷிவானியின் நடிப்பு சிறப்பாக இருந்ததால் அவருக்கு இந்த படத்திலும் வெயிட்டான வேடம் கொடுத்திருக்கிறார்களாம். அதனால் இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் தனக்கு கண்டிப்பாக பெரிய இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார் ஷிவானி.

அதன்காரணமாக, தற்போது சில சிறிய ஹீரோக்களின் படங்கள் முற்றுகையிட்டபோதும், ஜீரோ படம் வெளியாகட்டும் அதன்பிறகு சொல்கிறேன் என்று சிக்காமல் நழுவிக்கொண்டு வருகிறார் ஷிவானி.

ஆனால் அவர் பெரிய அளவில் எதிர்பார்க்கும ஜீரோ படமோ, ஹீரோ வேல்யூ இல்லாததால் வியாபாரம் ஆகாமல் தடுமாறிக்கொண்டு கிடப்பதாக சொல்கிறார்கள்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions