நடிகர் ஆனார் எழுத்தாளர் ஷோபா சக்தி

Bookmark and Share

நடிகர் ஆனார் எழுத்தாளர் ஷோபா சக்தி

நவீன எழுத்தாளர்களில் முக்கியமானவர் ஷோபா சக்தி. அவர் தற்போது தீபன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல இயக்குனர் ஜாக் ஓடியார் ஈழத் தமிழர் பிரச்னையை மையமாக கொண்டு இயக்கும் படம் இது.

இலங்கையில் யுத்தம் நடக்கும்போது அங்கிருந்து தப்பி அகதிகளாக பிரான்ஸ் நாட்டிற்கு வரும் மூன்று இளைஞர்கள், அங்கு சந்திக்கும் பிரச்னைகள்தான் கதை. பிரான்ஸ், இலங்கை, ரமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

இந்தப் படத்திற்கு வசனம் எழுதுவதற்காகத்தான் இயக்குனர் ஜாக், ஷோபா சக்தியை அழைத்திருக்கிறார். திடீரென அவரையே நடிகராக்கி விட்டார். படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விட்டது. இதனை உலகம் முழுவதும் திரையிட ஏற்பாடு நடந்து வருகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions