வெள்ள நிவாரணத்துக்கு ஒரு லட்சம் வழங்கினார் நடிகை ஷோபனா!

Bookmark and Share

வெள்ள நிவாரணத்துக்கு ஒரு லட்சம் வழங்கினார் நடிகை ஷோபனா!

வருகிற 18ந் தேதி முதல் 25ந் தேதி வரை சென்னையில் லக்ஷமண் ஸ்ருதி இசையகம் நடத்தும் 11வது திருவையாறு நிகழ்ச்சியை இயக்குனரும், நடன கலைஞருமான பிரபு தேவா துவக்கி வைக்கிறார்.

இந்நிகழ்ச்சி தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை நடக்கிறது.  இந்த நிகழ்ச்சியின் மூலம் வெள்ள நிவாரண நிதி திரட்டப்படுகிறது. இத்தொகை முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கப்படுகிறது. 

இதன் தொடக்க நிகழ்ச்சியில் நடிகையும், நடன கலைஞருமான ஷோபனா ஒரு லட்சம் ரூபாய் வழங்கி தொடங்கி வைத்தார். மேலும் அவர் கூறுகையில், "வெள்ளை பாதிப்பு நேரத்தில் இசை நிகழ்ச்சியா என்று நான் யோசிக்கவில்லை.

காரணம் நான் எதையும் பாசிட்டிவாக நினைப்பேன். சென்னை மக்கள் என் நேசத்திற்கு உரியவர்கள் அவர்களின் துன்பத்தில் நானும் பங்கெடுக்கும் முகமாக இந்த சிறு தொகையை வழங்குகிறேன்" என்றார் ஷோபனா.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions