ஸ்ரத்தாவை பாராட்டிய ஆதித்யா சோப்ரா

Bookmark and Share

ஸ்ரத்தாவை பாராட்டிய ஆதித்யா சோப்ரா

ஏபிசிடி படத்திற்கு பிறகு ரெமோ டிசோசா இயக்கத்தில் ஏபிசிடி-2 வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

குறிப்பாக ஏபிசிடி-2 படத்தின் ஹீரோயினான ஸ்ரத்தா கபூருக்கு ரசிகர்கள் வாயிலாகவும், திரைப்பிரபலங்கள் மூலம், போனிலும், சமூக வலைதளங்களிலும், நேரிலும் ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

இதனால் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் ஸ்ரத்தா. ஸ்ரத்தாவை பலரும் பாராட்டினாலும், ஆதித்யா சோப்ரா பாராட்டியதை மிகவும் பெருமையாக கருதுகிறார்.

ஆதித்யா சோப்ரா கூறுகையில், ஏபிசிடி-2 படம் பார்த்தேன். ஸ்ரத்தாவின் நடிப்பு அருமையாக இருக்கிறது. இந்தப்படத்திற்காக அவர் கடுமையாக உழைத்திருப்பது படத்தில் பார்க்கும் போதே தெரிகிறது. இந்தப்படம் ஸ்ரத்தாவுக்கு ஒரு ஸ்பெஷலான படம் என்று கூறியுள்ளார்.

ஆதித்யா பாராட்டியதை பற்றி ஸ்ரத்தா கூறுகையில், பலரும் என்னை பாராட்டினார்கள், ஆதித்யா சாரின் பாராட்டு எனக்கு புதிய உற்சாகத்தை தந்துள்ளது. அவரிடம் பெற்ற பாராட்டை பெரிய விருதாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
படுக்கையறையில் கணவரின் அட்டகாசம், ஓபனாக பேசிய நடிகரின் மனைவி - ஷாக்கான ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions