மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு படம்- ஸ்ரேயா வெளியிட்டார்

Bookmark and Share

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு படம்- ஸ்ரேயா வெளியிட்டார்

‘‘மார்பக புற்றுநோய் குறித்து பெண்களுக்கு முழுமையான விழிப்புணர்வு வேண்டும்’’ என்று நடிகை ஸ்ரேயா ரெட்டி பேசினார்.

சென்னை டர்ன்ஸ் பிங்க் தன்னார்வ தொண்டு நிறுவனம் தயாரித்துள்ள மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு விளம்பரப் படம் ஒன்றை வெளியிட்ட அவர், இதுபற்றி மேலும் பேசியதாவது:மார்பக புற்றுநோய் என்பது பெண்களுக்கே உரிய பிரத்யேக பிரச்னை. ஆனால், அதுபற்றிய விழிப்புணர்வு பெண்களிடம் குறைவு.

புற்றுநோய் தாக்கிய பிறகே அதுபற்றி கவலைப்படுகிறார்கள். திருமணம் ஆனவர், ஆகாதவர் யாருக்கு வேண்டுமானாலும் இது வரலாம். 30 வயது கடந்தவர்கள் மார்பக புற்றுநோய் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

40 வயது கடந்தவர்கள் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். திரைப்படத் துறையை சேர்ந்த நடிகைகள் சிலர் மார்பக புற்றுநோயால் தாக்கப்பட்டு, துணிச்சலுடன் போராடி அதை வென்றிருக்கிறார்கள்.

அவர்களை, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். மார்பக புற்றுநோய் இல்லாத ஒரு உலகத்தை பெண்களால் படைக்க முடியும். அதற்காக பெண்கள் முன்வர வேண்டும். இவ்வாறு பேசினார்.

நிறுவனத்தின் தலைவர் ஆனந்தகுமார், செயலாளர் ரவுனக், தூதுவர்கள் சவுமியா அன்புமணி, நீரஜா மாலிக், விளம்பரப் பட இயக்குனர் விஜயபத்மா பங்கேற்றனர். 


Post your comment





Related News
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
சிம்புவையே பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்வி கேட்ட ஸ்ரீரெட்டி- என்ன கேள்வி பாருங்க
ஆணவக்கொலை பற்றிய கதை புதுமுகங்களின் அணிவகுப்பில் "குட்டி தேவதை"..!
ஸ்ரீரெட்டியின் வலையில் அடுத்ததாக சிக்கிய பிரபல நடிகர்! லீலைகளை வெளியிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ஸ்ரீரெட்டி
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions