சுறாவுடன் நீச்சல்... நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக்கொண்ட ஸ்ரேயா!!

Bookmark and Share

சுறாவுடன் நீச்சல்... நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக்கொண்ட ஸ்ரேயா!!

நம்ம சூப்பர் ஸ்டாருக்கே ஜோடி போட்டு நடித்த ஸ்ரேயா கையில் இப்போது ஒரே ஒரு தமிழ் படம் தான். அதுவும் சிம்புவுடனான ஏஏஏ. அது எப்போது ரெடியாகும் என்பது தெரியாததால் அதற்காக காத்திருக்காமல் தனது ஆசைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக்கொள்ள துவங்கியுள்ளார்.

கடலில் இறங்கி சுறாவுடன் நீந்த வேண்டும் என்று நீண்டகாலமாக ஆசைப்பட்டு வந்தார் (விஜய் இல்லீங்க... இது நிஜ சுறா). ஏற்கனவே அவர் கடலுக்கடியில் நீந்தும் பயிற்சிகள் பெற்றிருப்பதால் எப்படியாவது தனது எண்ணத்தை நிறைவேற்ற எண்ணினார்.

சமீபத்தில் மாலத்தீவு சென்றார் ஸ்ரேயா. அங்குள்ள கடல் பகுதியில் தனது எண்ணத்தை நிறைவேற்ற முடிவு செய்து அதற்கான நீச்சல் கவச உடைகளுடன் கடலில் குதித்து சுறாக்களுடன் பயமின்றி நீந்தி மகிழ்ந்தார்.

இதுபற்றி அவர் கூறும்போது, "தனியாக கடலுக்கு நடுவே படகு செலுத்திச் சென்றேன். பிறகு கடலில் குதித்து ராட்சத திமிங்கலம் மற்றும் சுறா மீன்களுடன் நீண்ட நேரம் நீந்தியபடி விளையாடினேன். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. தவிர இரவு நேரத்திலும் கடலில் குதித்து நீந்தியபடி இருந்தேன். அங்கிருந்து திரும்பி வரும் எண்ணமே எனக்கு வரவில்லை. அவ்வளவு ஜாலியாக இருந்தது," என்றார்.

கொடுத்து வைத்த சுறா!


Post your comment





Related News
பிரபல நடிகரை பற்றி புகார் அளிக்க முடியாமல் தவிக்கும் ஸ்ரேயா- என்ன பிரச்சனையோ?
விபச்சாரியாக நடிக்கிறதுக்கு நான் வெட்கப்படவில்லை! ஸ்ரேயா
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் வெய்ன் பிராவோவுடன் ஸ்ரேயா காதல்
பாகுபலி 2 படத்தில் ராணாவுக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரேயா!
ஷ்ரேயாவின் அதிர்ச்சி செல்ஃபி!
என் கவர்ச்சி தோற்றத்துக்கு உணவும் உடற்பயிற்சியும் காரணம்- ஸ்ரேயா பேட்டி!
பாகுபலி அனுஷ்கா வேடத்தில் நடிக்க ஆசை- ஸ்ரேயா
நடிகர்கள் யாரையும் நான் காதலிக்கவில்லை: நடிகை ஸ்ரேயா மறுப்பு
அஜய் மனைவி கேரக்டரில் ஷ்ரேயா
அம்மாவா நடிச்சா என்ன தப்பு..? சீறும் ஸ்ரேயா!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions