நடிகர்கள் யாரையும் நான் காதலிக்கவில்லை: நடிகை ஸ்ரேயா மறுப்பு

Bookmark and Share

நடிகர்கள் யாரையும் நான் காதலிக்கவில்லை: நடிகை ஸ்ரேயா மறுப்பு

நடிகை ஸ்ரேயா தெலுங்கில் தயாரான இஷ்டம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் 2001-ல் வெளிவந்தது. தொடர்ந்து தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தார். தமிழில் ரஜினி ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்து பிரபலமானார். விஜய், விக்ரம் ஜோடியாவும் நடித்துள்ளார். 

தற்போது தமிழில் ஸ்ரேயாவுக்கு பட வாய்ப்புகள் இல்லை. கடைசியாக ஜீவா ஜோடியாக ரவுத்திரம் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் 2011 ல் வந்தது. அதன் பிறகு அவர் நடிப்பில் தெலுங்கில் வந்த பவித்ரா படமும் கன்னடத்தில் வந்த சந்திரா படமும் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டன. இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட திரிஷ்யம் படத்தில் அஜய் தேவ்கான் ஜோடியாக நடித்துள்ளார். 

இந்த படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் ஸ்ரேயாவை தெலுங்கு கதாநாயகர்களுடன் இணைத்து கிசு கிசுக்கள் வந்த வண்ணம் இருந்தன. இதற்கு ஸ்ரேயா தற்போது பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:- 

கதாநாயகர்களுடன் என்னை தொடர்புபடுத்தி செய்திகள் வருகின்றன, அதில் உண்மை இல்லை. நான் எந்த நடிகரையும் காதலிக்கவில்லை. நிறைய கதாநாயகர்களுடன் நடித்து விட்டேன்.

அவர்களுடன் எனக்கு தொழில் ரீதியான தொடர்பு மட்டுமே இருந்தது வேறு எந்த உறவும் கிடையாது. எனக்கு பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம் செய்துகொள்வேன். 

இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.


Post your comment





Related News
பிறந்தநாளில் புகை பிடிக்கும் காட்சியை வெளியிட்ட ஸ்ரேயா
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்
ரகசிய திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா - முதல் முறையாக லீக்கான புகைப்படம்.!
10 வயது சிறியவரை திருமணம் செய்யும் பிரபல நடிகை, ஷாக்கான ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions