பாகுபலி அனுஷ்கா வேடத்தில் நடிக்க ஆசை- ஸ்ரேயா

Bookmark and Share

பாகுபலி அனுஷ்கா வேடத்தில் நடிக்க ஆசை- ஸ்ரேயா

‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பின் ஜெயம் ரவியுடன் ‘மழை’, ரஜினியுடன் ‘சிவாஜி’  போன்ற படங்களில் நடித்து தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக மாறியவர் ஸ்ரேயா. 

சிவாஜி படத்துக்கு பின் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. விஜய், விக்ரம், விஷால், தனுஷ், ஜீவா என பெரிய கதாநாயகர்களுடன் நடித்தார். தமிழில் அவர் கடைசியாக நடித்த ‘ரவுத்திரம்’ படத்திற்கு பிறகு இவருக்கு படங்கள் இல்லை. 

தெலுங்கில் நடித்த ‘பவித்ரா’, கன்னடத்தில் நடித்த ‘சந்திரா’ படங்களை தமிழிலும் மொழி மாற்றம் செய்து வெளியிட்டனர். இந்தியில் தயாரான ‘திரிஷ்யம்’ படத்தில் அஜய் தேவ்கான் ஜோடியாக நடித்தார். இந்த படம், சமீபத்தில் வெளியாகி தோல்வி அடைந்தது. 

இது குறித்து ஸ்ரேயா, “நான் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நிறைய படங்களில் நடித்துவிட்டேன். நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தன. ஆனாலும் எனது திறமை முழுமையாக இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.

‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் ஸ்ரீதேவி நடித்தது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்துவிட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதுபோல், ‘பாகுபலி’ படத்தில் அனுஷ்கா நடித்ததுபோன்ற வேடத்தில் நடிக்கவும் விரும்புகிறேன்” என்றார்.

 


Post your comment





Related News
ஆரவ்வின் அடுத்த படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் - சரண் இயக்குகிறார்
பிறந்தநாளில் புகை பிடிக்கும் காட்சியை வெளியிட்ட ஸ்ரேயா
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்
ரகசிய திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா - முதல் முறையாக லீக்கான புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions