கவர்ச்சி எல்லையை மீறமாட்டேன்: சுருதிஹாசன் பேட்டி

Bookmark and Share

கவர்ச்சி எல்லையை மீறமாட்டேன்: சுருதிஹாசன் பேட்டி

சுருதிஹாசன், ‘சபாஷ் நாயுடு’ படத்தில் அவருடைய தந்தை கமல்ஹாசனுடன் நடித்துக்கொண்டு இருக்கிறார். சிங்கம் படத்தின் 3-ம் பாகமாக தயாராகும் எஸ்-3 படத்தில் சூர்யாவுடன் நடிக்கிறார். தெலுங்கு, இந்தியிலும் தலா ஒரு படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

இந்தி படங்களில் அவர் கவர்ச்சியாக வருவதாக விமர்சனங்கள் கிளம்பின. சமீபத்தில் சுருதிஹாசன் கவர்ச்சியாக ‘போஸ்’ கொடுத்து எடுக்கப்பட்ட படங்கள் இணைய தளங்களில் பரவி உள்ளன.

இதுகுறித்து சுருதிஹாசனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

‘‘நான் கவர்ச்சியாக இருக்கிறேன். அதனால் எல்லோருக்கும் கவர்ச்சியாக தெரிகிறேன். புதுமையாக யோசிப்பது கூட கவர்ச்சிதான். நடிகைகள் கவர்ச்சியை மட்டுமே நம்பிக்கொண்டு சினிமாவில் நீடிக்க முடியாது. கவர்ச்சியும், திறமையும் சேர்ந்து இருக்க வேண்டும்.

என்னை பார்த்து யாரேனும் கவர்ச்சியாக இருக்கிறீர்கள் என்றால் சந்தோஷப்படுவேன். ஆனாலும் கவர்ச்சியின் எல்லை எனக்கு தெரியும். அதை மீற மாட்டேன். எனது ரசிகர்கள் நான் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதற்கு முக்கியத்துவம் தருவேன். அவர்கள் எனக்கு ஒரு நடிகையாக மனதில் இடம் தந்தால் போதும்.’’

இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.


Post your comment





Related News
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
முக்கியமான இந்த இடத்தில் ஒரு ஷோ கூட ஓடவில்லையா? - விஸ்வரூபம் 2
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்
என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்! - பிக்பாஸ் ஷரீக்
இந்தியன் 2 படத்தில் இந்த பாலிவுட் ஹீரோ நடிக்கிறாரா? கமல்ஹாசன் அளித்த பதில்
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions