கவர்ச்சி கதைக்கு தேவை என்றால் நடிப்பேன்: சுருதிஹாசன்

Bookmark and Share

கவர்ச்சி கதைக்கு தேவை என்றால் நடிப்பேன்: சுருதிஹாசன்

அஜித் ஜோடியாக சுருதிஹாசன் நடித்த ‘வேதாளம்’ படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்தியில் இரண்டு படங்கள் கைவசம் வைத்துள்ளார். கவர்ச்சியில் தாராளமாக நடிப்பதாக சுருதிஹாசன் மீது விமர்சனங்களும் கிளம்பியுள்ளன.

இதுகுறித்து அவர் கூறியதாவது;- பிரபலமாக இருப்பது மகிழ்ச்சி தரக்கூடியது. அதற்காக நான் நடிகையாகவில்லை. நட்சத்திர அந்தஸ்தும் சந்தோஷமானதுதான் அதற்காகவும் நடிக்க வரவில்லை. நடிப்பு என்பது என் பரம்பரையில் இருக்கிறது அந்த ஆர்வத்தில் தான் நடிகையானேன். 

கவர்ச்சி பிடிக்குமா, குடும்பப்பாங்கான வேடம் பிடிக்குமா என்று என்னிடம் கேட்கின்றனர். இரண்டையும் சமமாகவே பார்க்கிறேன். நடிக்க வந்த பிறகு எல்லா கதாபாத்திரங்களும் ஒன்றுதான்.

கவர்ச்சி என்பது டூயட் பாடுவது, மரத்தை சுற்றி ஓடுவது என்று சாதாரணமாக நினைக்கிறார்கள். அதுவும் கஷ்டமானதுதான் என்பதை யாரும் உணர்வது இல்லை. 
கவர்ச்சியாக நடிப்பது எளிதானது அல்ல.

அதிலும் ரொம்ப சிரமம் இருக்கிறது. அதை குறைத்து மதிப்பிட வேண்டாம். கதைக்கு என்ன தேவையோ அதுமாதிரி நடிக்க நான் தயார். கதைக்கு கவர்ச்சி தேவை என்றால் கவர்ச்சியாகவும் நடிப்பேன். இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions