கனவுக்கன்னி பட்டியலில் முதலிடம் ஸ்ருதிஹாசன்!

Bookmark and Share

கனவுக்கன்னி பட்டியலில் முதலிடம் ஸ்ருதிஹாசன்!

நடிகை ஸ்ருதிஹாசன் இந்தி திரைப்படம் லக் படத்தில் அறிமுகமாகி பின்பு தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அண்மையில் தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் நடித்து வெளியான ஸ்ரீமந்துடு படம் மிகப் பெரிய வெற்றிபடமாக ஆகியிருப்பதால் ஸ்ருதியின் மார்க்கெட் சூடுபிடித்து உள்ளன. ஸ்ரீமந்துடு படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சிகரமாக நடித்து இருக்கிறார்.

இதற்கிடையே ஸ்ருதிஹாசன் நடித்த படங்களின் புகைப்படங்கள் கூகுள் தேடலில் முதலிடம் பிடித்திருக்கின்றன.  ஸ்ரீமந்துடு படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்த கவர்ச்சி படங்கள் வெளியிட்டதில் இருந்து கூகுள் தேடலில் ஸ்ருதியின் புகைப்படங்கள்தான் லட்சக்கணக்கான ரசிகர்கள் பதிவிறக்கமும் செய்திருக்கிறார்களாம்.

அந்த வகையில், இந்திய அளவிலான தற்போதைய இளவட்ட ரசிகர்களின் கனவுக்கன்னி பட்டியலில் ஸ்ருதிஹாசனுக்கு முதலிடம் கிடைத்திருப்பதாக சொல்கிறார்கள்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions