ப்ளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த பின்னணி பாடகி!

Bookmark and Share

ப்ளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த பின்னணி பாடகி!

தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. வழக்கம் போல மாணவிகளே முதலிடமும், அதிக தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக இருக்கும் ஸ்ருதியும் ப்ளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்திருக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ருதி, சமீபத்தில் தான் ப்ளஸ் 2 தேர்வு எழுதினார். அதில், ப்ளஸ் தேர்வில் 1172 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்திருக்கிறார்.

இது ஸ்ருதியை மிகவும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. ஸ்ருதிக்கு படிப்பில் எந்தளவுக்கு ஆர்வமோ, அதே அளவு இசையிலும் அதிக ஆர்வம் உண்டு.

ஒத்தவீடு படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமான ஸ்ருதி, 'உ' படத்தில் இடம்பெற்ற திக்கித் தெணறுது தேவதை போன்ற படத்தின் மூலம் பிரபலமானார்.

இப்பாடல் யூடியூப்பில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானபேரால் ரசிக்கப்பட்டுள்ளது. தற்போது மதுரை மாவட்டம், தேசிய செய்திகள், சயனம் உள்ளிட்ட 7 படங்களுக்கு பாடி வருகிறார். சினிமாவில் பின்னணி பாடகியாக இருந்தாலும் படிப்பை விட மாட்டேன் என்கிறார் ஸ்ருதி.


Post your comment





Related News
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
வருத்தத்தை ஏற்படுத்தும் பிரிவு - காதலரை பிரிவது குறித்து சுருதிஹாசன் வேதனை
ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக நான் நடிக்கவில்லை! சங்கமித்ரா பற்றி திஷா பதானி
உச்சகட்ட கவர்ச்சியில் ஸ்ருதிஹாசன் - லீக்கான புகைப்படம்.!
கவர்ச்சி பிகினி உடையில் பிரபல பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
நடிக்க வாய்ப்பு தருவதாக பாலியல் தொல்லை - பட அதிபர் மீது சுருதி ஹரிகரன் புகார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions