அஜித் சமையல், ஸ்ருதிஹாசன் பாராட்டு

Bookmark and Share

அஜித் சமையல், ஸ்ருதிஹாசன் பாராட்டு

அஜித்துடன் நடிப்பவர்கள் அவரைப் பற்றிப் புகழ்ந்து பேசுவதும், அவருடைய சமையலைப் பற்றிப் பாராட்டிப் பேசுவதும் வழக்கமான ஒன்று. அனைத்துக் கலைஞர்களுடனும் எந்த விதமான பேதமும் பார்க்காமல் அஜித் பழகும் குணம் அவருக்கு திரையுலகிலேயே பல ரசிகர்களைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

அதோடு, அவர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பின் போது ஏதாவது ஒரு நாளில் அவர் கையாலேயே பிரியாணி சமைத்து அனைவருக்கும் அவர் பரிமாறுவது வழக்கம். அஜித்தின் நடிப்புக்கு இருக்கும் ரசிகர்கள், அவருடைய சமையலுக்கும் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

இப்போது அஜித்துக்கும் அவருடைய சமையலுக்கும் புது ரசிகை ஒருவர் கிடைத்திருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, அஜித்துடன் தற்போது புதிதாக ஜோடி சேர்ந்துள்ள ஸ்ருதிஹாசன்தான்.

'சிறுத்தை' சிவா இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில் கடந்த சில நாட்களாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். அஜித்துடன் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்வது இதுவே முதல் முறை.

அவருடன் பழகிய சில நாட்களிலேயே அஜித் புராணம் பாட ஆரம்பித்துவிட்டார் ஸ்ருதிஹாசன். “அஜித் அற்புதமான மனிதர் மட்டுமல்ல, சிறந்த 'குக்' கும் கூட. அவருடன் இந்தப் படத்தில் நடிப்பது அருமையான அனுபவம்,” என அஜித்தைப் பற்றி தன்னுடைய டிவிட்டர் தளத்தில் பாராட்டியுள்ளார். நேற்றிலிருந்து ஸ்ருதிக்கு புதிதாக லட்சக்கணக்கான ரசிகர்கள் சேர்ந்திருப்பார்கள் என்பது நிச்சயம்...?


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions