ஒரு தைரியமான படித்த பெண் ஸ்ருதி பாலா

Bookmark and Share

ஒரு தைரியமான படித்த பெண் ஸ்ருதி பாலா

தமிழ் சினிமா எண்ணற்ற திறமைமிக்க கலைஞர்களின் புகலிடமாய் இருந்துள்ளது. கேரளத்திலிருந்து மற்றுமொரு திறமைமிக்க நடிகையை பெற்றுள்ளது தமிழ் சினிமா, இயக்குனர் A வெங்கடேஷ் இயக்கும் ‘ரொம்ப நல்லவன்டா நீ‘ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் ஸ்ருதி பாலா . ‘மிர்ச்சி’ செந்தில் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ‘ரோபோ’ சங்கர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
 
“ விளம்பர படங்கள் மற்றும் மாடலிங் செய்து கொண்டிருக்கும்பொழுது சினிமா வாய்ப்புகள் வந்தன. சிறு வயது முதலே பாரம்பரிய நடனம் கற்று வந்ததால் நடிப்பு பாவங்கள் கொண்டு வருவது சுலபமாய் அமைந்தது. இருப்பினும் எனது முதல் படம் நல்ல கதையுடையதாய் இருக்க வேண்டும் என்று எண்ணினேன்.  அதற்கேற்றாற்போல் இயக்குனர் வெங்கடேஷ் சார் இக்கதையை கூறினார். ‘அங்காடி தெரு’ படத்தில் படுபயங்கரமாய் வரும் ஆளா என்று ஆச்சரியத்தில் இருந்தேன். இப்படத்தில் முழுக்க முழுக்க உதவியாய் இருந்தார்.”
“ ‘ரொம்ப நல்லவன்டா நீ’ நகைச்சுவை திரைப்படம். எனது கதாப்பாத்திரம் ஒரு தைரியமான படித்த பெண்.  ‘மிர்ச்சி’ செந்தில் எனக்கு ஜோடியாக வருகிறார். துளியும் அலட்டல் இல்லாத மனிதர். இருப்பினும், ஷூட்டிங் சமயத்தில் செந்தில் , ‘ரோபோ’ சங்கர் இருவரும் என்னை வம்பு செய்து கொண்டே இருப்பார்கள். ‘ரோபோ’ எப்பொழுதும் கலகலவென இருப்பார். அவர் இருந்தால் ஷூட்டிங் முழுதும் மகிழ்ச்சியாய் இருக்கும்”  என்று கூறினார் ஸ்ருதி பாலா.           


Post your comment





Related News
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions