பாலாஜி சக்திவேல் படத்தில் ஸ்ருதி

Bookmark and Share

பாலாஜி சக்திவேல் படத்தில் ஸ்ருதி

நெருங்கி வா முத்தமிடாதே படத்தின் மூலம், தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான ஸ்ருதி ஹரிஹரன், இயக்குநர் பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதுகுறித்து, ஸ்ருதி ஹரிஹரன் கூறியதாவது, எனக்கு சில மாதங்களுக்கு முன்பே, பாலாஜி சக்திவேல் குழுவிலிருந்து அழைப்பு வந்தது. அப்போது நான் கன்னடப் படங்களில் பிசியாக இருந்ததால், என்னால், நடிக்க ஒத்துக்கொள்ள இயலவில்லை. இந்நிலையில், தாய்லாந்தில் நான் படப்பிடிப்பில் இருந்தபோது, மீண்டும் அழைப்பு வந்தது.

கன்னட  ஒளிப்பதிவாளர் சித்தார்தா நுனியின் அறிவுரையின் பேரில், ஆடிசனில் கலந்துகொண்டேன். என் நடிப்பு அவர்களுக்கு பிடித்து இருந்ததால், இப்படத்தில் நடிக்க நான் ஒப்பந்தமானேன். பாலாஜி சக்திவேல் இயக்கத்திலான படப்பிடிப்பு, விரைவில் துவங்க உள்ளதாக ஸ்ருதி ஹரிஹரன் கூறினார்.

 

 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions