காதல்னு வந்துட்டா ஸ்ருதி ஹாஸன் எந்த மாதிரி தெரியுமா?

Bookmark and Share

காதல்னு வந்துட்டா ஸ்ருதி ஹாஸன் எந்த மாதிரி தெரியுமா?

காதல் என்று வந்துவிட்டால் தான் அந்த காலத்தை சேர்ந்தவள் என்று நடிகை ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார். ஸ்ருதி ஹாஸன் சூர்யாவுடன் சேர்ந்து நடித்துள்ள எஸ் 3 படம் வரும் 26ம் தேதி ரிலீஸாகிறது. தெலுங்கில் அவர் பவன் கல்யாணுடன் கட்டமராயுடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தியில் ராஜ்குமார் ராவுடன் பெஹன் தேரி ஹோகி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ருதி காதல் பற்றி கூறுகையில்,நான் என் தந்தை கமலுடன் பேசிக் கொண்டிருந்தேன்.

அப்போது அவர் கூறியதாவது,

எங்கள் காலத்தில் வாட்ஸ்ஆப் இல்லாததால் தான் பாதி காதல் கதைகள் நடந்தன. நேரில் பார்த்து தான் பேச வேண்டும் என்றார்.நோக்கிய போன், எஸ்.எம்.எஸ். எனக்கு நினைவிருக்கிறது. முன்பு லேண்ட்லைன் போன் இருந்தது.

பசங்க போன் செய்தால் அம்மா எடுத்துவிடக் கூடாது என்று பயப்படுவோம். இந்த தலைமுறையினருக்கு அது எல்லாம் தெரியாதது வருத்தம் அளிக்கிறது.காதலை பொறுத்தவரையில் நான் அந்த காலத்து பெண். எனக்கு காதல் கலந்த காமெடி படங்கள் பிடிக்கும்.

வீட்டில் இருந்தால் அத்தகைய படங்களையே பார்ப்பேன். ஆனால் இதுவரை நான் ஒரு ரொமான்டிக் காமெடி படத்தில் கூட நடிக்கவில்லை.பெஹன் ஹோகி தேரி படத்தின் கதை காமெடியாக இருக்கும். நம்மை பழைய காலத்திற்கு அழைத்துச் செல்லும். தற்போது நம் வாழ்க்கை எவ்வளவு சிக்கலாகிவிட்டது என்பது புரியும். என் கதாபாத்திரம் மிகவும் பிடித்துள்ளது.


Post your comment





Related News
பாகுபலிக்கு முன்பே கமல் போட்ட பிரம்மாண்ட பிளான்? என்ன தெரியுமா
ரஜினி, கமல் படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகள்! எதற்கு இப்படி சொன்னார் கமல்?
தெர்மாக்கோல் சம்பவத்தை வைத்து தமிழக அரசை சீண்டிய கமல்
கமல் ஹாசனுடன் கைகோர்க்கும் விஜய் இயக்குனர்!
ராஜமவுலிக்காக தமன்னா செய்ததை சுந்தர் சி.க்காக செய்யும் ஸ்ருதி
பிக் பாஸ் கமல்ஹாசன்... விருந்தினர்கள் யார்? யார்?
ஸ்ருதிஹாசனுக்கு பிடிக்காத அந்த வார்த்தை! சொன்னால் என்னாகும் தெரியுமா
கமல்ஹாசன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இனி நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? கமல் ஹாசன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions