குறும்படங்களுக்காக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ஸ்ருதி

Bookmark and Share

குறும்படங்களுக்காக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ஸ்ருதி

தமிழ் சினிமாவில் நிறைய குறும்படங்கள், சினிமாவாக உருவாகி பெரிய வெற்றியை பெற்றுள்ளன. இந்த குறும்படங்களுக்கான சமீபத்தில் ரஜினியின் மகளும், தனுஷின் மனைவியும், இயக்குனருமான ஐஸ்வர்யா, குறும்படங்களுக்கென்று தனியாக யுடியூப் சேனல் ஒன்றை உருவாக்கினார். 

இந்த வரிசையில், தற்போது குறும்படங்களுக்கு கைகொடுக்கும் விதமாக கமலின் மகள் நடிகை ஸ்ருதிஹாசன் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். ‘இசிட்ரோ’ என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் குறும்படங்கள் மட்டுமல்லாது, மியூசிக் வீடியோஸ், அனிமேஷன் படங்கள் ஆகியவற்றையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம். 

ஸ்ருதி, புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கியது குறித்து அவரது அப்பா கமல்ஹாசன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளாராம். அவருக்கு ஆலோசனைகளும் வழங்கியுள்ளாராம். 

தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் நல்ல திறமைசாலிகளையும், இசையில் ஆர்வம் உள்ளவர்களையும் வைத்து மியுசிக் ஆல்பங்களை தயாரிக்க ஸ்ருதி திட்டமிட்டுள்ளார். எதிர்காலத்தில் திரைப்படங்களை தயாரிக்கவும் ஸ்ருதி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions