நயன்தாராவுக்கு தலைவலி கொடுக்கும் ஸ்ருதிஹாசன்!

Bookmark and Share

நயன்தாராவுக்கு தலைவலி கொடுக்கும் ஸ்ருதிஹாசன்!

எனக்கு நம்பர்-ஒன் மீதெல்லாம் நம்பிக்கை கிடையாது. இப்போது மார்க்கெட்டில் இருக்கிற நடிகைகளில் நானும் ஒருவர் அவ்வளவுதான் என்று பேட்டிகளில் நயன்தாரா கேசுவலாக பேசி வந்தபோதும், தற்போது, கோலிவுட்டில் அதிக படங்களில் நடிக்கும் ஹன்சிகாவின் மார்க்கெட் பெரிதாக இல்லை என்பதால், கோடம்பாக்கத்தைப் பொறுத்தவரை நாம்தான் நம்பர்ஒன் என்ற எண்ணம் அவரது மனதளவில் இருந்து கொண்டுதான் இருந்தது.

அதனால்தான், மாஸ் படத்தில் சூர்யாவுடன் நடித்து வந்தபோது, திடீரென்று ஐ பட நாயகி எமி ஜாக்சனை அந்த படத்துக்குள் இழுத்தபோது, அவருக்கு என்னை விட பெரிய வேடம் கொடுத்தால் நான் விலகிக்கொள்கிறேன்.

தமிழில் முன்னணியில் இருக்கும் நான் எமியை விட சிறிய ரோலில் நடித்தால் என் இமேஜ் போய் விடும் என்று எகிறி பேசினார். அதனால்தான் எமியை ஏறக்கட்டி விட்டனர்.

அதனால், நாம் தமிழில் நம்பர் ஒன்னாக இருப்பதினால்தான் நமது வார்த்தைக்கு மதிப்புக்கொடுக்கிறார்கள் என்று தனக்குள்ளே முடிவு செய்து கொண்ட நயன்தாராவுக்கு இப்போது ஸ்ருதிஹாசன்தான் பெரிய தலைவலியாகியிருக்கிறார்.

காரணம், பூஜை படத்துக்குப்பிறகு விஜய்யுடன் புலி படத்திலும் நடித்து வரும் ஸ்ருதிஹாசனை, மேலும் சில படங்களுக்காகவும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதற்கு ஏற்கனவே நயன்தாரா தூது அனுப்பி வந்தார்.

இப்போது ஸ்ருதி இறங்கி அடிப்பதால், அவர் பக்கம் அந்த படங்கள் திரும்பி நிற்கிறதாம். அதனால், கைநிறைய படங்கள் இருந்தபோதும், அடுத்தபடியாக மேல்தட்டு ஹீரோக்களின் படங்கள் தனக்கு வருவது குறைந்து விடுமோ என்கிற அச்சம் இப்போது நயன்தாராவுக்கு அதிகரித்திருக்கிறது.

அதனால்தான், இதுவரை தமிழே போதும் என்று தேடி வந்த தெலுங்கு படங்களை திருப்பிவிட்டு வந்த நயன்தாரா, இப்போது தெலுங்கிலும் ஒரு கால் பதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions