அப்பாவுடன் இருந்தால் தனி உற்சாகம் பிறக்கும்: சுருதிஹாசன் பேட்டி

Bookmark and Share

அப்பாவுடன் இருந்தால் தனி உற்சாகம் பிறக்கும்: சுருதிஹாசன் பேட்டி

கமல்ஹாசனின் ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பு அமெரிக்காவில் தொடங்கி இருக்கிறது.‘தசாவதாரம்’ படத்தில் கமல் நடித்த ‘பல்ராம்நாயுடு’ பாத்திரத்தை முமுநீள கதையாக்கி அந்த வேடத்தில் கமல் நடிக்கிறார்.

இதில் முதல்முறையாக சுருதிஹாசன் தனது தந்தையுடன் அவரது மகளாவே நடிக்கிறார். கமலின் இளைய மகள் அக்ஷரா இந்த படத்தில் துணை இயக்குனராக பணிபுரிகிறார்.

அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடந்து வரும் ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பில் தனது தந்தையுடன் நடிக்கும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்கும் சுருதிஹாசன்...

‘‘அப்பா படப்பிடிப்பு தளத்தில் இருந்தால் அந்த இடமே முழு நம்பிக்கை நிறைந்த உற்சாக உலகமாக மாறிவிடும். தன்னை அறியாமலே உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.

முதல் நாள் படிப்பிடிப்பு அட்டகாசமாக இருந்தது. அப்பாவுடன் பணியாற்றுவது மகிழ்ச்சி, கவுரவம். அவர் உற்சாகமான உத்வேகத்தை கொண்டு வந்துவிடுகிறார். அவர் படப்பிடிப்பு தளத்தில் இருந்தாலே போதும், அந்த உற்சாக சக்தி எனக்குள் பரவிவிடுகிறது’’ என்று கூறியுள்ளார்.

இந்த படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு அமெரிக்காவிலும், 20 சதவீத படப்பிடிப்பு இந்தியாவிலும் நடக்கிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு கமலின் இந்த படத்துக்கு இளையராஜா இசை அமைக்கிறார்.

 


Post your comment





Related News
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions