அதை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் இதை..: ஸ்ருதி

Bookmark and Share

அதை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் இதை..: ஸ்ருதி

எப்பொழுது வேண்டுமானாலும் பாடலாம், இசையமைக்கலாம் ஆனால் ஹீரோயினாக நடிக்க முடியாது என்று நடிகை ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார். ஸ்ருதி ஹாஸன் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிப் படங்களில் நடித்து வருகிறார். அவர் தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய்யுடன் சேர்ந்து புலி படத்தில் நடித்து வருகிறார். ஸ்ருதி நடிப்பதோடு மட்டும் அல்லாமல் பாட்டும் பாடி வருகிறார்.

இந்நிலையில் நடிப்பு பற்றி ஸ்ருதி கூறுகையில்,

ஒரு நடிகைக்கு அதிலும் குறிப்பாக பெரிய ஹீரோயினுக்கு மவுசு சிறிது காலம் தான். 7 முதல் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஹீரோயினாக தாக்குப்பிடிக்க முடியாது.

ஹீரோயினின் மவுசு குறைந்த காலமே என்பதால் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள விரும்புகிறேன்.பாட்டு பாடுவதையும், இசையமப்பதையும் நான் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம்.

ஆனால் நடிப்பு அப்படி இல்லை என்றார் ஸ்ருதி.ஸ்ருதி பாட்டு பாடுவதுடன் இசையமைப்பதிலும் ஆர்வம் உள்ளவர். இது தவிர அவர் திரைக்கதை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அதனால் திரைக்கதை எழுத உதவும் அப்ளிகேஷனை அப்பா கமல் ஸ்ருதிக்கு பிறந்தநாள் பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions