ஆந்திர மந்திரியுடன் சுருதிஹாசன் தகராறு செய்தாரா?: மந்திரி விளக்கம்

Bookmark and Share

ஆந்திர மந்திரியுடன் சுருதிஹாசன் தகராறு செய்தாரா?: மந்திரி விளக்கம்

சுருதிஹாசன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத்தில் இருந்து திருப்பதிக்கு விமானத்தில் சென்ற போது, அதே விமானத்தில் ஆந்திர மாநில அறநிலையத்துறை மந்திரி மாணிக்யால ராவும் பயணம் செய்தார். இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.

விமான பயணத்தின் போது மந்திரி மாணிக்யால ராவ் செல்போனில் சத்தம் போட்டு பேசியதாகவும், அது தனக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியதால், அதுபற்றி விமான பணிப்பெண்ணிடம் சுருதிஹாசன் புகார் செய்ததாகவும், இதனால் வாக்குவாதம், தகராறு ஏற்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.

இது குறித்து மந்திரி கூறியதாவது:-

திருப்பதிக்கு விமானத்தில் நான் பயணம் செய்த போது, செல்போனில் எனக்கு முக்கியமான குறுந்தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து, கட்சிக்காரர் ஒருவருக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக நான் அவசரமாக டாக்டரிடம் பேச வேண்டி இருந்தது. இதனால் டாக்டரிடம் பேசினேன்.

அப்போது எனது முன் இருக்கையில் அமர்ந்து இருந்த சுருதிஹாசன், சத்தம் போட்டு பேச வேண்டாம் என்று என்னிடம் கூறினார். நான் பேசிக்கொண்டு இருந்ததால், அவருக்கு சைகை மூலம் பதில் அளித்துவிட்டு தொடர்ந்து பேசினேன். உடனே இதுபற்றி சுருதிஹாசன் விமானப்பணிப்பெண்ணிடம் கூறியதால், அவர் என்னிடம் வந்து, ‘சார் சற்று மெதுவாக பேசுங்கள்’ என்றார்.

அவரிடமும் நான், முக்கியமான விஷயம் பற்றி பேசுவதால், 2 நிமிடம் அனுமதிக்குமாறு சைகை மூலம் தெரிவித்தேன். பேசி முடித்ததும் செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்து விட்டேன். இதுதான் நடந்தது. மற்றபடி எனக்கும் சுருதிஹாசனுக்கும் இடையே வாக்குவாதமோ, தகராறோ நடைபெறவில்லை.

இவ்வாறு மந்திரி மாணிக்யால ராவ் தெரிவித்தார். 


Post your comment

Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions