குறளரசன் இசையில் பாடிய ஸ்ருதிஹாசன்

Bookmark and Share

குறளரசன் இசையில் பாடிய ஸ்ருதிஹாசன்

சிம்பு, நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் 'இது நம்ம ஆளு' படத்திற்காக இன்னும் சில பாடல் காட்சிகள்தான் எடுக்கப்பட வேண்டும். படத்திற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகும்  சிம்புவின் தம்பி குறளரசன் பாடல்களைத் தருவதில் மிகவும் தாமதம் செய்ததே படம் தள்ளிப் போனதற்குக் காரணம் என்றும் ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போதுதான் மீதமுள்ள பாடல்களை கம்போஸ் செய்யும் பணியில் இறங்கியிருக்கிறார் குறளரசன். சமீபத்தில் இந்தப் படத்திற்காக குறளரசன் இசையமைப்பில் மதன் கார்க்கி எழுதிய பாடல் ஒன்றை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார்.

சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் யாராவது நட்பின் அடிப்படையில் அழைத்தால் அவர்களின் படங்களுக்கு ஸ்ருதிஹாசன் பாடிக் கொடுத்து வருகிறார். இதற்கு முன்னும் அவர் பல படங்களில் பாடியிருக்கிறார்.

ஆனால், சிம்பு நடிக்கும் படம் ஒன்றில் அவர் பாடுவது இதுவே முதல் முறை. குறளரசன் தற்போது பாடல்களைத் தர ஆரம்பித்துவிட்டதால் விரைவில்  'இது நம்ம ஆளு' படத்தின் பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு ஆரம்பமாகிவிடும் எனத் தெரிகிறது.

'வாலு' படம் வெளிவந்த சில வாரங்களுக்குள் 'இது நம்ம ஆளு' படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions