
அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் கப்பார் இஸ் பேக் படத்தில் பாட்டு பாடுவதற்காக, கோவையிலிருந்து மும்பை வந்த ஸ்ருதி, பாட்டு பாடிய பின், சில மணிநேரங்களில், மீண்டும் கோவை திரும்பியுள்ளார்.
உலக நாயகன் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாது, பாடல்களும் பாடி வருகிறார். தான் நடித்த படங்களுக்கு மட்டுமல்லாது, மற்றவர்களின் படங்களிலும், ஸ்ருதி பாட்டு பாடி வருகிறார்.
இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், தமிழ் படத்தின் சூட்டிங்கில் இருந்த ஸ்ருதிஹாசன், அக்ஷய் குமாரின் வேண்டுகோளுக்கிணங்க, கப்பார் இஸ் பேக் படத்தில் பாட்டு பாடுவதற்காக, கோவையிலிருந்து விமானத்தில் மும்பை சென்ற ஸ்ருதி, ஒரு மணிநேரத்திலேயே, பாட்டு பாடி முடித்துவிட்டு, மீண்டும் கோவை திரும்பி, பட சூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார்.
ஸ்ருதிஹாசன் குரலில், உருவான பாடல்கள், கோலிவுட் மட்டுமல்லாது, பாலிவுட்டிலும் பட்டையை கிளப்பி வருகிறது. தீவர் மற்றும் ஷமிதாப் படங்களில், ஸ்ருதிஹாசன் பாடல் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Post your comment