அப்பா படத்தில் நடிக்க மறுத்த ஸ்ருதிஹாசன், அக்ஷரா

Bookmark and Share

அப்பா படத்தில் நடிக்க மறுத்த ஸ்ருதிஹாசன், அக்ஷரா

கமல்ஹாசன் குடும்பமே ஒரு நடிப்புக் குடும்பம். கமல்ஹாசனின் இரு மகள்களும் தற்போது நடிகைகளாக மாறிவிட்டார்கள். ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிஸியாக இருக்கிறார். அக்ஷரா ஹாசன் அறிமுகமான ஷமிதாப் ஹிந்திப் படம் படுதோல்வி அடைந்தது.

இன்னும் அடுத்த படத்தில் நடிக்க அக்ஷரா சம்மதிக்காமல் இருக்கிறார். 

அவர் தொடர்ந்து ஹிந்தியில் நடிப்பாரா, அல்லது தமிழில் அறிமுகம் ஆவாரா என்பது தெரியவில்லை. மகள்கள் இருவருமே இன்னும் அப்பாவுடன் இணைந்து நடிக்கவில்லை. இது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் கமல்ஹாசன் அதைப் பற்றிப் பேசியுள்ளார்.

“அவ்வை சண்முகி படத்தை எடுக்க முடிவெடுத்த போது அந்தப் படத்தில் என்னுடைய மகளாக நடிக்க வைக்க அக்ஷராவைக் கேட்டேன். அப்போது மூன்று வயதே ஆன அக்ஷரா தன்னால் 40 நாட்களுக்கும் மேலாக ஒரு படத்தில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். 

அதன் பின் ஸ்ருதிஹாசனை என்னுடைய படங்களில் நடிக்க அழைத்த போது தான் அதற்கு இன்னும் தயாராகவில்லை என அவர் பதிலளித்தார்,” என கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

கமல்ஹாசன் நடித்த உன்னைப் போல் ஒருவன் படத்திற்கு ஸ்ருதிஹாசன் இசையமைப்பாளராக மட்டும் பணியாற்றியுள்ளார். அப்போது அவர் நடிப்பதற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கமல் நடித்துள்ள சில படங்களில் அவர் பாடியும் இருக்கிறார். விரைவில் கமல்ஹாசனுடன் அவருடைய மகள்கள் நடிப்பார்கள் என  எதிர்பார்க்கலாம்.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions