பட நிறுவனத்துக்கு எதிராக சுருதி ஹாசன் கோர்ட்டில் மனு

Bookmark and Share

பட நிறுவனத்துக்கு எதிராக சுருதி ஹாசன் கோர்ட்டில் மனு

தமிழ், தெலுங்கில் தயாராகும் படமொன்றில் கார்த்தி, நாகார்ஜூன், நாயகர்களாக நடிக்கின்றனர். இப்படத்தில் நாயகியாக நடிக்க சுருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.

படப்பிடிப்பு துவங்கும் போது திடீரென அப்படத்தில் நடிக்க மறுத்து விட்டார். இதையடுத்து படத்தை தயாரித்த பிக்சர் ஹவுஸ் மீடியா நிறுவனம் சுருதி மீது ஐதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. படத்தில் நாயகியாக சுருதி ஹாசனை ஒப்பந்தம் செய்ததாகவும் அதை மீறி நடிக்க மறுத்து விட்டார் என்றும் மனுவில் குறிப்பிட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புது படங்களில் சுருதி ஹாசன், நடிக்க தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சுருதிஹாசன் ஐதராபாத் சிட்டி சிவில் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:–

பிக்சர் ஹவுஸ் மீடியா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க என்னை ஒப்பந்தம் செய்தது உண்மைதான். ஆனால் அதற்காக நான் முன் பணம் எதுவும் வாங்கவில்லை.

கால்சீட் விவரங்களை ஒரு மாதத்துக்கு முன்பு தெரிவிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டு உள்ளது. ஆனால் ஏப்ரல் 2–ந்தேதி படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என்று மார்ச் 17–ந்தேதிதான் எனக்கு தெரிவித்தனர். அந்த நேரத்தில் நான் புலி படத்தில் பிசியாக நடித்து கொண்டு இருந்தேன்.

எனவேதான் அந்த தேதிகளில் வர இயலாது என்று கூறினேன். அதன் பிறகு பட நிறுவனத்தினர் புலி படத்தின் தயாரிப்பாளர்களிடமும் பேசினார்கள். ஆனாலும் தேதிகள் ஒதுக்க முடியவில்லை. எனவேதான் அந்த படத்தில் இருந்து விலகுவதாக தகவல் தெரிவித்தேன். கோர்ட்டில் எனக்கு எதிராக பட நிறுவனத்தினர் வழக்கு போடுவதற்கு முன்பே தமன்னாவிடம் பேசி படத்துக்கு நாயகியாக ஒப்பந்தம் செய்து விட்டனர்.

இந்த விஷயத்தை கோர்ட்டு கவனத்தக்கு கொண்டு வராமல் மறைத்து விட்டார்கள். புது படங்களில் நான் நடிப்பதற்கு தடை உத்தரவும் பெற்று விட்டனர். அட்வான்ஸ் தராமலும் தமன்னாவை தேர்வு செய்தும் ஒப்பந்தத்தை மீறி விட்டார்கள். எனவே புது படங்களில் நான் நடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் சுருதிஹாசன் கூறியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையை நீதிபதி நாளை மறுநாள் 20–ந்தேதி ஒத்தி வைத்தார். 


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions