வழக்கு போட்ட தயாரிப்பாளர் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடும் சுருதிஹாசன்

Bookmark and Share

வழக்கு போட்ட தயாரிப்பாளர் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடும் சுருதிஹாசன்

சமீபத்தில் பிவிபி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்க ஒப்பந்தமாகி பிறகு விலகினார். இதனால் பிவிபி நிறுவனம் சுருதிஹாசன் எந்த படத்திலும் நடிக்கக்கூடாது என்று வழக்கு தொடர்ந்தது. பின்னர் படத்தில் இருந்து விலகியதற்கு சுருதிஹாசன் காரணம் கூறினார். இதன்பின் பட நிறுவனமும் சுருதிஹாசனும் சமரசம் பேசி வழக்கை வாபஸ் பெற்றனர்.

தற்போது பிவிபி நிறுவனம் தயாரித்து வரும் மற்றொரு படமான ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் சுருதிஹாசன் ஒரு பாடலுக்கு நடனம் ஆட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆர்யா-அனுஷ்கா ஜோடியாக நடிக்கும் இப்படத்தை கே.எஸ்.பிரகாஷ் இயக்கிவருகிறார். இப்படத்தில் ஒரு சிறப்பான பாடல் ஒன்று இடம் பெறுகிறதாம். இந்த பாடலுக்கு ஒரு முன்னணி நடிகையை ஆட வைக்க முயற்சி நடந்தது. தற்போது சுருதிஹாசனே இந்த பாடலுக்கு நடனம் ஆட இருப்பதாக கூறப்படுகிறது.

சண்டை போட்ட நிறுவனத்துடனே மீண்டும் சமரசம் ஆகி ஒரு பாடலுக்கு நடனம் ஆட ஒப்பந்தமாகியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சுருதிஹாசன் தற்போது விஜய்யுடன் இணைந்து ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions