ஸ்ருதிஹாசன் டிரைவர் இல்லை, வக்கீல்...?

Bookmark and Share

ஸ்ருதிஹாசன் டிரைவர் இல்லை, வக்கீல்...?

வீரம்  சிவா இயக்கத்தில், அஜித் மீண்டும் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் கோல்கட்டாவில் ஆரம்பமானது. இப்படத்தில் அஜித் ஜோடியாக முதன் முறையாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.

சென்னையில் ஆரம்பமான முதல் கட்டப் படப்பிடிப்பை அடுத்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இத்தாலியில் நடைபெற்றது. அங்கு சில பாடல் காட்சிகளை படமாக்கியுள்ளார்கள். இப்போது கோல்கட்டாவில் படக்குழுவினர் அனைவரும் முகாமிட்டுள்ளார்கள்.

அஜித், ஸ்ருதிஹாசன், அஜித் தங்கையாக நடிக்கும் லட்சுமி மேனன் உட்பட முக்கிய நட்சத்திரங்கள் அங்கு நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

கோல்கட்டாவின் முக்கிய வீதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அப்போது அஜித் தான் கார் டிரைவராக நடித்தாராம். ஆனால், ஸ்ருதிஹாசன் வக்கீல் கோட் அணிந்து காட்சிகளில் நடித்துள்ளார்.

அந்தத் தகவல் படப்பிடிப்பு நடந்த சமயத்திலேயே கோல்கட்டாவிலிருந்து சமூக வலைத்தளங்கள் மூலமாக மிகவும் வேகமாகப் பரவியது.  இதற்கு முன்னும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்ற போது, அஜித், லட்சுமி மேனன் கலந்து கொண்ட படப்பிடிப்புக் காட்சிகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிவேகமாகப் பரவின. இப்போது மீண்டும் அதே போல் பரவி வருகிறது.  அஜித் நடிக்கும் இந்தப் படத்தைப் பற்றிய தகவல்கள் அனைத்துமே ரகசியமாக வைக்கப்பட்டு வருகிறது. இன்னும் பெயர் கூட வைக்க முடியாத படத்திற்கு இப்படி ஒரு பில்டப் கொடுக்கிறார்களே...!


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions