உத்தம வில்லன் படத்தைத் தவிர்க்கும் ஸ்ருதிஹாசன்

Bookmark and Share

உத்தம வில்லன் படத்தைத் தவிர்க்கும் ஸ்ருதிஹாசன்

உலக நாயகன் நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் உத்தம வில்லன் திரைப்படம் மே 1 ஆம் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக திரைக்கு வரவுள்ளது. திருப்பதி பிரதர்ஸ் மற்றும்  ராஜ்கமல் நிறுவனங்களின் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள  இந்தப் படத்தினை நடிகர் கமலஹாசனின் நண்பரும் பிரபல நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார்.

உத்தம வில்லன் படத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதாக படத்தின் தயாரிப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

இதனால் இந்த வழக்கு ஒத்தி  வைக்கப்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் படத்தை  திரையிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இப்படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் உட்பட அனைவரும் ஆர்வம் காட்டும் நிலையில் கமலின் மகள் இப்படத்தை முதல் நாள் பார்க்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

இதற்கு கரணம் அவர் ஹிந்தி நடிகர் அக்ஷய் குமாருடன் நடித்துள்ள கப்பர் இஸ் பேக்  படம் மே 1 ஆம் தேதி திரைக்கு வருவதே. இது குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் கூறுகையில் "எனக்கு தொழில் தான் முதலில் முக்கியம்.

அவர் எனது தந்தையாக இருந்தாலும் என் படம் திரையிடும் நாளில் அவரது படம் திரைக்கு வருவதால் அவர் எனக்கு போட்டியாளரே" என்று தெரிவித்துள்ளார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா?


Post your comment

Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions