வந்தது "மணப்பெண்" களை... பட்டுச் சேலையில் ஜொலித்த ஸ்ருதி....!

Bookmark and Share

வந்தது

அழகான பட்டுப் புடவையில் அப்படியே அம்சமாய் ஜொலித்தார் ஸ்ருதி ஹாசன். மகளை சேலையில் பார்த்தாலோ என்னவோ தந்தை கமல்ஹாசனின் முகத்திலும் கூடுதல் பூரிப்பு + புன்னகை.

ஹைதரபாபாத்தில் நடந்த உத்தமவில்லன் ஆடியோ வெளியீட்டு விழாவில்தான் இந்த சுவாரஸ்ய காட்சி.

அரை குறை உடைகள், மாடர்ன் உடைகளிலேயே பார்த்துப் பழகிப் போன கண்களுக்கு ஸ்ருதி பட்டுச் சேலையில் அமெரிக்கையாக காட்சி அளித்தது வியப்பில் ஆழத்தி விட்டது.. அடடா, நம்ம ஸ்ருதியா இது என்று தங்களைத் தாங்களே கிள்ளிப் பார்த்துக் கொண்டனர் பலரும்.

கெளரங் ஷா பட்டுச் சேலையில் பார்த்தவர்கள் குஷி அடையும் வகையில் தேவதை போல வந்திருந்தார் ஸ்ருதி ஹாசன். அவரை சேலையில் பார்த்த பலருக்கும், ஓகே, பொண்ணுக்கு மணப்பெண் களை வந்து விட்டது.. இனி அப்பா கமல் மாப்பிள்ளை தேட வேண்டியதுதான் என்று சிரித்துக் கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த கமல்ஹாசனும், ஸ்ருதியை சேலையில் பார்த்த சந்தோஷத்திலோ என்னவோ கூடுதல் பூரிப்புடன் காணப்பட்டார்.. அவர் மட்டும் என்னவாம்...

அழகான சில்வர் கிரே கலர் சூட்டிலும், அதற்கேற்ற கருப்பு நிற கோட்டிலும் வழக்கம் போல டிரஸ்ஸிங் சென்ஸில் பட்டையைக் கிளப்பியிருந்தார்.


Post your comment





Related News
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions