வேண்டாமென்ற படத்தில் மீண்டும் ஸ்ருதிஹாசன்...?

Bookmark and Share

வேண்டாமென்ற படத்தில் மீண்டும் ஸ்ருதிஹாசன்...?

உண்மையிலேயே பிரச்னைதானா, அல்லது பிரச்னை போல விளம்பரப்படுத்துகிறார்களா, இல்லை உண்மையிலேயே சமாதானம் ஆகிறார்களா என்றுதான் சில சர்ச்சைகளைப் பார்க்கும் போது கேட்க தோன்றுகிறது.

தெலுங்குத் திரையுலகில் பிரபல நிறுவனமான பிவிபி சினிமாஸ் தயாரிக்க நாகார்ஜுனா, கார்த்தி, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முதன் முறையாக இணைந்து நடிக்க தமிழ், தெலுங்கில் இன்னும் பெயரிடப்படாத  படம் ஒன்று சில வாரங்களுக்கு முன் ஆரம்பமானது.

ஆனால், கடந்த வாரம் அந்தப் படத்திலிருந்து விலகுவதாக திடீரென ஸ்ருதிஹாசன் தங்களுக்கு சொன்னதாகவும், அதனால் அவர் மீது வழக்கையும் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்தது.

அதையடுத்து ஸ்ருதிக்கு புதுப் படங்களில் ஒப்பந்தமாக நீதிமன்றம் தடைவித்தது. அதன் பின் அந்தப் படத்தில் தமன்னாவை நடிக்க வைக்கக் கூட முயற்சிகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியானது.

இதனிடையே தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய நிலையை இறுக்கமாகவே வைத்துக் கொண்டதால் வழக்கு போன்ற விஷயங்கள் எதற்கு என ஸ்ருதிக்கு நெருக்கமான சிலர் ஆலோசனை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்துடன் சமரச முயற்சியில் ஸ்ருதிஹாசன் இறங்கினாராம். கால்ஷீட் தேதிகளை அட்ஜஸ்ட் செய்து தருவதாகவும், அதற்கேற்றபடி படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என ஸ்ருதி தெரிவித்துள்ளதாகவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஷயத்தில் மேற்கொண்டு சமரசம் ஏற்படே வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள். அதை, தயாரிப்பு நிறுவனமும், இயக்குனரும்தான் முடிவு செய்வார்கள் என்கிறார்கள். சில நாட்களில் இது பற்றிய அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


Post your comment





Related News
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions