என் தங்கை அக்ஷரா தைரியசாலி –சுருதிஹாசன்

Bookmark and Share

என் தங்கை அக்ஷரா தைரியசாலி –சுருதிஹாசன்

கமல் மகள்கள் சுருதி ஹாசன், அக்ஷராஹாசன் இருவரும் சினிமாவுக்கு வந்துள்ளனர். சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவர் கைவசம் நிறைய படங்கள் உள்ளன. தற்போது புலி படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

இதையடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இதன் பட வேலைகளும் விரைவில் துவங்க உள்ளது. இதுபோல் சுருதியின் தங்கை அக்ஷராவும் திரையுலகில் கலக்க தயாராகிறார். ஏற்கனவே அமிதாப்பச்சன், தனுசுடன் இணைந்து ஷமிதாப் படத்தில் நடித்தார். இதில் சிறப்பாக நடித்து இருந்ததாக அவருக்கு பாராட்டுகள் குவிகிறது. அதுபோல் படவாய்ப்புகளும் குவிகிறது. கதை கேட்டு வருகிறார்.

இந்த நிலையில் தங்கையை புகழ்ந்து சுருதி பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–

என் தங்கை அக்ஷரா தைரியசாலி சுயமாக முடிவு எடுக்கும் திறமை உண்டு. சொந்த காலில் நிற்கும் தைரியமும் இருக்கிறது. நல்ல புத்திசாலியும் கூட. அக்ஷராவின் சினிமா வாழ்க்கையில் என் உதவிகள் தேவையாக இருக்கவில்லை.

இப்போதைய பெண்களும் யாருடைய உதவியையும் எதிர்பார்ப்பதும் இல்லை. அவர்களே தங்களை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். இந்தியில் நான் நடித்த கப்பார் இஸ்பேக் படமும் என் தந்தையின் உத்தமவில்லன் படம் இன்று ஒன்றாக ரிலீசாகிறது. இரு படங்களும் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions