மனதுக்கு பிடித்தவர் கிடைக்காவிட்டால் திருமணம் செய்து கொள்ளமாட்டேன்: சுருதிஹாசன்

Bookmark and Share

மனதுக்கு பிடித்தவர் கிடைக்காவிட்டால் திருமணம் செய்து கொள்ளமாட்டேன்: சுருதிஹாசன்

மனதுக்கு பிடித்தவர் கிடைக்காவிட்டால் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று சுருதிஹாசன் கூறினார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:–

கேள்வி: எப்படிப்பட்டவரை திருமணம் செய்து கொள்வீர்கள்?

பதில்:– திருமணம் பற்றி நான் சிந்திக்கவில்லை. திருமணம் பற்றி சில நம்பிக்கையும் இருக்கிறது. கணவராக வருகிறவர் என் ஆத்மாவை திருடுபவராக இருக்க வேண்டும். என் மனம் முழுக்க அவர் நிறைய வேண்டும். எல்லா விஷயங்கள் பற்றியும் அவரோடு நான் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனாலும் திருமணம் பற்றி முடிவு எடுத்துக்கொள்ள எனக்கு வாய்ப்பு கொடுத்தால் திருமணமே செய்து கொள்வது இல்லை என்ற முடிவை எடுப்பேன். திருமணம் என்பது சிக்கலானது. இதற்காக திருமண முறைக்கு நான் எதிர்ப்பு என எடுத்துக்கொள்ள கூடாது. என் நண்பர்கள் சிலர் அழகான திருமண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். என்னை பொருத்தவரை திருமணம் என்பது கூடையில் இருக்கும் பூக்கள் போன்றது என் மனதை கேட்டால் அந்த பூக்கள் வேண்டாம். கூடையில் இருக்கும் உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்களை எடுத்துக்கொள் என்றுதான் சொல்லும்.

கே:– திருமணத்தை ஏன் சிக்கலானதாக பார்க்கிறீர்கள்?

ப:– என் கவனம் எல்லாம் இப்போது சினிமாவில் தான் இருக்கிறது. அதில் இருந்து சிந்தனையை திசை திருப்பும் எண்ணம் இல்லை. என் வாழ்க்கையில் சில நல்ல விஷயங்கள் இருக்கின்றன. சில நல்ல நண்பர்களும் இருக்கிறார்கள். இருபது வயதை தாண்டும் என் வாழ்க்கையில் சாம்பார் சாதம் இதுவரை பிடித்த உணவாக இருந்து இருக்கிறது. எனக்கு கணவராக வருகிறவர் நான் விரும்பி சாப்பிடும் சாம்பார் சாதம் போல் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனைகள்தான் ஏற்படும். எனவே அப்படி பிடித்தமானவர் கணவராக அமையாவிட்டால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.

கே:– சினிமாவில் இருப்பவரை மணப்பீர்களா?

ப:–ஆமாம் திருமணம் பற்றி முடிவு எடுத்தால் சினிமாவில் இருப்பவரை தேர்வு செய்வேன். அதில் சில பிரச்சனைகள் இருந்தாலும் நிறைய நன்மைகள் இருக்கிறது. என் தாய், தந்தை சினிமாவில் இருந்து வந்தவர்கள் எனவே திரையுலகில் இருப்பவரை மணப்பது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

கே:– அப்படிப்பட்டவரை திரையுலகில் சந்தித்து விட்டீர்களா?

ப:– இதுவரை சந்திக்கவில்லை.

கே:– உங்கள் தங்கை அக்‌ஷரா நடிக்க வந்துள்ளாரே? அவருக்கு அறிவுரை சொல்வீர்களா?

ப:– சொல்ல மாட்டேன். என் பெற்றோர் சினிமாவில் நாங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று ஆலோசனை எதையும் சொன்னது இல்லை. அக்‌ஷரா புத்திசாலி. அவரது வழியை அவரே தீர்மானித்துக்கொள்வார். 


Post your comment





Related News
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
முக்கியமான இந்த இடத்தில் ஒரு ஷோ கூட ஓடவில்லையா? - விஸ்வரூபம் 2
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்
என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்! - பிக்பாஸ் ஷரீக்
இந்தியன் 2 படத்தில் இந்த பாலிவுட் ஹீரோ நடிக்கிறாரா? கமல்ஹாசன் அளித்த பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions