விஜய்யுடன் ஸ்ருதிஹாசன் - ஹன்சிகா டூயட்!

Bookmark and Share

விஜய்யுடன் ஸ்ருதிஹாசன் - ஹன்சிகா டூயட்!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புலி படத்தின் வசன காட்சிகள் முடிவடைந்து விட்டது. அதனால் தற்போது பாடல் காட்சிகளை படமாக்கும் இறுதிகட்ட பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது.

மேலும், இதில் நாயகிகளாக நடிக்கும் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா இரண்டு பேருடனும் விஜய்க்கு டூயட் பாடல் உள்ளதாம். அந்த பாடல்களை சீனாவில் படமாக்க ஏற்கனவே திட்டமிட்டிருந்தார் சிம்புதேவன்.

ஆனால், தற்போது லொகேசனை கம்போடியா நாட்டுக்கு மாற்றியிருக்கிறார். காரணம் புலி சரித்திர பின்னணி கொண்ட கதையில் உருவாவதால், பல காட்சிகளை கோயில் லொகேசன்களில் படமாக்கி வந்த அவர், பாடல் காட்சிகளையும் உலக பிரசித்தி பெற்ற கோயில்களில் படமாக்குகிறாராம்.

அதனால் கம்போடியாவில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அங்கோர்வாட் என்ற விஷ்ணு கோயிலில் இரண்டு பாடல்களை படமாக்குகிறாராம். முன்னதாக, ஒரு வாரத்துக்கு முன்பே யூனிட் நபர்கள் அங்கு சென்று படப்பிடிப்புக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வைக்கப்போகிறார்களாம். ஆக, இந்த இரண்டு பாடல்களும் படமாக்கப்பட்டு விட்டால், புலிக்கு பூசணிக்காய் உடைத்து விடுவார்கள் என்று தெரிகிறது.


Post your comment





Related News
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
வருத்தத்தை ஏற்படுத்தும் பிரிவு - காதலரை பிரிவது குறித்து சுருதிஹாசன் வேதனை
ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக நான் நடிக்கவில்லை! சங்கமித்ரா பற்றி திஷா பதானி
உச்சகட்ட கவர்ச்சியில் ஸ்ருதிஹாசன் - லீக்கான புகைப்படம்.!
கவர்ச்சி பிகினி உடையில் பிரபல பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
நடிக்க வாய்ப்பு தருவதாக பாலியல் தொல்லை - பட அதிபர் மீது சுருதி ஹரிகரன் புகார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions