தந்தை கமல் இயக்கத்தில் நடிக்க பயந்து பயந்து வந்தது: ஸ்ருதி ஹாஸன்

Bookmark and Share

தந்தை கமல் இயக்கத்தில் நடிக்க பயந்து பயந்து வந்தது: ஸ்ருதி ஹாஸன்

தந்தை கமல் ஹாஸனின் இயக்கத்தில் நடிக்க பயமாக இருந்ததாக ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார்.ஸ்ருதி ஹாஸன் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அவர் சூர்யாவுடன் எஸ் 3 படத்தில் நடித்து முடித்துள்ளார். தந்தை கமல் ஹாஸனின் சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வருகிறார்.

இந்தியில் ராஜ்குமார் ஜோடியாக பெஹன் ஹோகி தேரி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு லக்னோவில் நடந்து வருகிறது.அப்பாவுடன் சேர்ந்து பணியாற்றுவது அருமையான அனுபவம். அதே சமயம் பயமானதும் கூட. காரணம் அவர் தயாரித்து இயக்குகிறார். அதனால் எனக்கு தனிப்பட்ட முறையில் மன அழுத்தம் அதிகம் என்கிறார் ஸ்ருதி.அப்பா என் நடிப்பை பாராட்டினார். அது தான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். அவர் நமக்காக பாராட்ட மாட்டார்.

அவர் விரும்பியபடி நடிக்காவிட்டால் முகத்திற்கு நேராகவே கூறிவிடுவார் என்று ஸ்ருதி தெரிவித்துள்ளார்.நான் இவருடன் தான் ஜோடி சேர்வேன் என்று இல்லை. என்னால் சேரை கூட ரொமான்ஸ் செய்ய முடியும் ஸ்ருதி என்று அப்பா கூறினார். அவரால் அது முடியும் என்று ஸ்ருதி கூறியுள்ளார்.

அஜய் கே. பன்னாலால் இயக்கி வரும் பெஹன் ஹோகி தேரி படத்தில் ராஜ்குமார் ராவ் ஜோடியாக நடிக்கிறேன். அவர் திறமையான நடிகர். அவருடன் சேர்ந்து நடிப்பதில் மகிழ்ச்சி என்கிறார் ஸ்ருதி.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions