அப்பாடி ரெய்னாவுக்கு கல்யாணம்: நிம்மதியில் ஸ்ருதி ஹாஸன்?

Bookmark and Share

அப்பாடி ரெய்னாவுக்கு கல்யாணம்: நிம்மதியில் ஸ்ருதி ஹாஸன்?

கிரிக்கெட் வீரர் ரெய்னாவுக்கு திருமணம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளதால் ஸ்ருதி ஹாஸனுக்கு ஒரு தலைவலி தீர்ந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருபவர் ஸ்ருதி ஹாஸன். அவர் தற்போது விஜய்யின் புலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நடிப்பது தவிர்த்து படங்களில் பாடல்களும் பாடி வருகிறார்.

இந்நிலையில் அவருக்கும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கும் இடையே காதல் என்று செய்திகள் வெளியாகின. இந்த செய்திகளை பார்த்த அவர்கள் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

நான் ஸ்ருதியை காதலிக்கவில்லை என ரெய்னாவும், நான் ரெய்னாவை காதலிக்கவில்லை என்று ஸ்ருதியும் கற்பூரம் அடிக்காத குறையாக தெரிவித்தனர். ஸ்ருதி, ரெய்னா கூறுவதை யாரும் காதில் வாங்கவில்லை. அவர்கள் காதலர்கள் தான். எந்த காதலர்கள் தான் தங்கள் காதலை ஒப்புக் கொண்டனர் என்று பலரும் பேசி வந்தனர்.

காதல் வதந்தி பரவிய நிலையில் தான் ரெய்னாவுக்கும் அவரது நீண்ட நாள் தோழியான பிரியங்கா சவுத்ரிக்கும் வரும் ஏப்ரல் 3ம் தேதி திருமணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெய்னாவின் திருமண அறிவிப்பால் ஸ்ருதி ஹாஸன் நிம்மதி அடைந்திருப்பார். இனியாவது ஏதாவது வதந்தி பரவாது என்று அவர் நிம்மதியாக உள்ளாராம்.


Post your comment





Related News
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
வருத்தத்தை ஏற்படுத்தும் பிரிவு - காதலரை பிரிவது குறித்து சுருதிஹாசன் வேதனை
ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக நான் நடிக்கவில்லை! சங்கமித்ரா பற்றி திஷா பதானி
உச்சகட்ட கவர்ச்சியில் ஸ்ருதிஹாசன் - லீக்கான புகைப்படம்.!
கவர்ச்சி பிகினி உடையில் பிரபல பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
நடிக்க வாய்ப்பு தருவதாக பாலியல் தொல்லை - பட அதிபர் மீது சுருதி ஹரிகரன் புகார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions